வாசிப்பு!!

வணக்கம் நண்பர்களே..

தொடக்கமே வாசிப்புனு போட்டுட்டு, என்னடா எல்லாரும் சொல்ற மாதிரி, பாடப்புத்தகத்த வாசிக்க சொல்லிருவாங்களோனு நினைச்சு பயந்திராதிங்க! இது பாடப்புத்தகத்தையும் தாண்டிய வாசிப்பு.

இந்த வாசிப்பு பழக்கம் தான் பெரியார், அண்ணா, அப்துல் கலாம், காந்தி மற்றும் நேரு போன்ற பெரிய மனிதர்களை உலகிற்கு அடையாளம் காட்டுச்சு.

“ஊருக்கு நல்லது சொல்வேன்” புத்தகத்திலிருந்து சில உண்மை வரிகள்.

உலக வரலாற்றில் சில புத்தகங்கள் சரித்திர நதியின் போக்கையே மாற்றி இருக்கிறது. ஒரு சில புத்தகங்கள் மனித குலத்தை நல்வழிப்படுத்தின. ஒரு சில புத்தகங்கள் இனப் படுகொலைக்கும், உலகப் போருக்கும் வழிவகுத்தன. வால்டேர், ரூசோவின் படைப்புகள் பிரெஞ்சுப் புரட்சிக்கு வழித்தடம் அமைத்தன. ஹிட்லரின் ‘மெயின் காம்ப்’பும், நீஷேவின் தத்துவ சிந்தனைகளும் ஜெர்மனியை போர் வெறி கொள்ளச் செய்தன. இதிலிருந்தே நீங்க தெரிஞ்சுக்கலாம் ஒரு புத்தகத்தோட வலிமை என்னனு..?

நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கும் மனோபாவம் மக்களிடையே மலர வேண்டும். புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை போன்றது. புத்தகங்களின் நடுவில் தான் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும். படிப்பதன் மூலம் தான் அறிவுக்கண் திறக்கும்.

நம்மை சிந்திக்க செய்யும் புத்தகங்களே நல்ல புத்தகங்கள். இசையின் இனிமை இசைக் குறிப்பில் இல்லை; அதைக் கேட்டு சிலிர்க்கும் இதயத்தில் இருக்கிறது. அதே போன்று, புத்தகத்தின் பெருமை அதன் உள்ளடக்கத்தில் இல்லை; அது நமக்குள் உருவாக்கும் உந்துதலில் இருக்கிறது. ஆனால், புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மோசமான புத்தகத்தை விட நம் நேரத்தைக் களவாடும் தீய திருடன் வேறு ஒருவரும் இல்லை.

“சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும். சிலவற்றை அப்படியே விழுங்கிவிட வேண்டும். சில புத்தகத்தை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அசைபோட்டு ஜீரணிக்க வேண்டும்”.

                                                                  -ஆங்கில அறிஞர் பேகன்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #vaasippu

8 thoughts on “வாசிப்பு!!

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d