உலகை மாற்றிய சமன்பாடுகள்

சமன்பாடுகள்..

AB2+BC2 = AC2

இந்த சமன்பாடு உங்கள்ள நிறைய பேருக்கு எங்கேயோ பார்த்த ஞாபகம்(?) போல தோணும். இதாங்க பிதாகரஸ் தேற்றம். ஆனா இந்த தேற்றத்தோட பயன்பாடு என்னங்க..? யாராச்சும் சொல்ல முடியுமா?

பள்ளிப் பருவத்தை தாண்டி வந்த எல்லாருமே கண்டிப்பா இந்த சமன்பாடு(equation) வார்த்தையைக் கேட்டிருப்போம். சிலர் எவன்டா இதையெல்லாம் கண்டுபிடிச்சான்னு திட்டிருப்போம், சிலர் அர்த்தமே புரியாம மனப்பாடம் பண்ணி தான் கண்டிப்பா எழுதியிருப்போம். நமக்கு  சமன்பாடும் தெரியாது, அதோட பயன்பாடும் தெரியாது. ஒரு உண்மைய சொல்லட்டுங்களா..? இந்த சமன்பாடுகள் மட்டும் இல்லேன்னா நாம இன்னும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாம, எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாம தான் இருந்திருப்போம். ஆரம்ப காலத்துல சமன்பாடுகளைக் கண்டுபிடிச்ச ஆராய்ச்சியாளர்களுக்கு அதுக்கான அங்கீகாரம் உடனே கிடைச்சுடலைங்க. சில நூற்றாண்டுகளுக்கு பிறகு கூட கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரம் கிடைச்சிருக்கு. அதை நிரூபிக்க அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்கனு இந்த புத்தகத்துல விரிவா சொல்லிருக்காரு ஆயிஷா இரா. நடராசன். தமிழில் இதுபோன்ற கணித சம்பந்தமான புத்தகங்கள் வெளிவருவது மிகவும் குறைவே. எளிமையான முறையில் வெளிவந்துள்ள இப்புத்தகம் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இன்னைக்கு மழை வருமா? நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற புவியின் தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள், வானொலி, தொலைக்காட்சி, கணினி செயல்பாடு, பங்கு சந்தை முதலீடு வரை அனைத்தும் சமன்பாடுகளைச் சார்ந்தே இருக்கிறது.

“அறிவியலின் தாய்” என்று சொல்லப்படற கணிதத்திலும் சில முக்கியமான சமன்பாடுகள் இன்னும் நாம நமக்கே தெரியாம நிறைய இடத்துல  பயன்படுத்திட்டு வரோம்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா..? காலையில எழுந்து பல் துலக்கறதுல ஆரம்பிச்சு ராத்திரி தூங்கப் போறவரைக்கும் அறிவியலும், கணிதமும் நம்ம வாழ்க்கையோடு ஒண்ணா பின்னிப் பிணைஞ்சிருக்கு. பேனாவில் ஆரம்பிச்சு ராக்கெட் சயன்ஸ் வரைக்கும் அறிவியலும், கணிதமும் இல்லாத துறையே இல்லை. பூஜ்ஜியத்தைக்(0) கண்டுபிடிச்சதே நாம தான், பூஜ்ஜியத்தோட பயன்பாடு என்னனு என்னிக்காவது யோசிச்சிருப்போமா..? இன்னிக்கு மட்டும் இந்த பூஜ்ஜியம் இல்லேன்னா, கம்ப்யூட்டர் உலகமே இப்போ இருந்திருக்காது. ஏன்னா பூஜ்ஜியமும் ஒண்ணும் சேர்ந்த பைனரி அல்ஜீப்ரா தான் கணினிக்கே அடிப்படை. யஜூர் வேதம் தான் முதன்முதலா முடிவுறா(infinity) எண்ணுக்கான விளக்கத்தை குடுத்தது.

கணிதத்தின் மும்மூர்த்திகள்ன்னு சொல்லப்படற π, e, i-யோட பயன்பாடுகள் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?

வரலாற்றையே மாற்றியமைத்த பல முக்கியமான கணித மற்றும் அறிவியல் சமன்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் மிகவும் எளிய முறையில் இந்தப் புத்தகத்தில் அமைந்து இதுக்கெல்லாம் கூட equation இருக்கான்னு பிரமிக்க வைக்குது.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #equation #maths & science #era.natarasan #ulagai maatria samanbadugal

want to buy : https://thamizhbooks.com/product/ulagai-maatriya-samanpadugal-1591/

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: