ஜீனோம்

“மனித உடல் கட்டிடம்..அறைகள் அதன் செல்கள்..அலமாரி ஒரு செல்லின் உட்கரு..அதில் உள்ள புத்தகம் DNA..ஒவ்வொரு புத்தகமும் 46 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில்(ஜீனோம்) உள்ளது ஜீவரகசியம்”.

“ஆரம்பக் குறிப்பு : இந்த அத்தியாயத்தைக் கஷ்டப்பட்டு புரிந்து கொண்டுவிட்டீர்கள் என்றால் இனி வரப்போகும் அதிசயங்களை வியப்பது சுலபமாகி விடும்”.

                                     -ஜீனோம் புத்தகத்திலிருந்து..

ஜீனோம்..

லைட் போட்ட உடனே ஓடி மறைகிற கரப்பான்பூச்சியும் நீங்களும் ஒரே மாதிரியான மூலப் பொருளிலிருந்து வந்தவங்க தான்னு சொன்னா உங்களால ஏத்துக்க முடியுமா?

தி ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்(HGP) 1990-ல் தொடங்கப்பட்டது. மனிதன் தனது ஆக்கத்தின் ரகசியத்தை வேறு பரிணாமத்திற்கு சென்று ஆராய ஆரம்பித்தான். DNA என்ற அடிப்படை கட்டமைப்பு உலகின் அனைத்து ஜீவராசிகளின் உருவம், கை, கால், நகம் வரை அனைத்து நுணுக்கமான கட்டமைப்புகளையும் எங்கோ, எதுவோ, கடவுளோ, இயற்கையோ புரதங்களின் எழுத்துக்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது என புரிந்துகொண்ட பின் அந்த எழுத்துக்களைப் படிக்க எடுத்த முயற்சியே HGP ஆகும்.

தயாராகுங்கள்!! மனிதனின் ஜீவரகசியத்தை தெரிந்துகொள்வதற்கு சுஜாதாவின் வகுப்பறைக்கு செல்ல..

“அறிவியலை ஒரு கட்டத்திற்கு மேல் எளிமைப்படுத்த முடியாது” என்பது சுஜாதா அவர்களின் கருத்து. ஆனால், ரசிக்கும் வகையில் புரியவைக்க முடியும் என தனது எழுத்தாற்றலின் மூலம் நிரூபித்தவர் சுஜாதா.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #sujatha #genome #DNA #HGP

want to buy : https://www.commonfolks.in/books/d/genome

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: