மேனகாவின் மே மாதம் – Crime Novel

“ஆசை, அதிகாரம், வக்கிரம், துரோகம் சூழ அரங்கேற்றப்படும் பாவங்களுக்கு அன்பு, நட்பு, பரிவு பார்வையாளர்களாக மட்டும் அல்லாமல் கோவம், ரௌத்திரம், வீரம் கொண்டு பழிதீர்க்கும். காத்திரு!!”

விடியற்காலையில் வந்த தகவல், ஆக்ஸிடெண்ட்டில் கண்டெடுக்கப்பட்ட 7 பிணங்கள். உயிர் பிழைத்த டிரைவரால் அடையாளம் காணப்பட்ட 6 பிணங்கள். 7-வதாக உள்ள இளம்பெண்ணின் பிணம் வந்த காரணம்..?

மேனகா..காதல்..கொலை..வக்கிரம்..

சாதாரண மருந்தகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நர்ஸ் மேனகாவிற்கு அவள் எதிர்பார்த்த பெங்களூர் வேலைக்கான அழைப்பு அவளுக்கு வந்து சேர்ந்தது. புதிய வேலைக்கு கிளம்ப வேண்டிய மேனகா திடீரென்று மாயமாய் மறைந்து போனாள். இதற்கிடையில் மருத்துவமனையிலிருந்து தப்பிச் செல்லும், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஒரு கைதி. இதைத் தொடர்ந்து வரிசையாக நடக்கும் மூன்று கொலைகள் மற்றும் கொலை செய்யப்படும் முறைகள் படிப்பவர்களுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைக்கும்.

மேனகாவிற்கு நேர்ந்தது என்ன? தப்பி சென்ற கைதி பிடிபட்டனா? மூன்று கொலைகளுக்கான காரணம் என்ன? குற்றவாளி யார்? கொலைக்களத்தில் போலீசாருக்கு கிடைத்தது என்ன?

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #menakavin may matham

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=683

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: