ஒரு ஊர்ல “குரங்குல இருந்து மனுஷன் வந்தான்”னு ஒரு கூட்டமும், “ஆதாம் ஏவாளுக்கு பொறந்தவங்க தான் மனுசங்க”ன்னு ஒரு கூட்டமும் சொல்லிக்கிட்டு சண்டை போட, பஞ்சாயத்து முத்தி போக ரெண்டு டீமும் நாட்டாமை கிட்ட போனா…………அந்தாளு “ஆதாரம் இருக்கா”ன்னு கேட்க, எலுமிச்சம்பழத்தை நசுக்கி பயணத்தை ஆரம்பிக்குது கிமு. கிபி.
பயணத்திட்டம்..
சாயங்காலம் லூசி கூட கடல் காத்து வாங்கிட்டு, நைல் நதி ஓரமா டென்ட் போட்டு தங்கிட்டு, காலைல எகிப்து போயி மம்மி கூட செல்பி எடுத்திட்டு, 300 பருத்திவீரர்கள் சண்டைய லைவா பாத்துட்டு, அப்படியே சாக்ரடீஸ மீட் பண்ணி தத்துவத்தை பாட்டில்ல நிரப்பிட்டு, அலெக்ஸாண்டர் கூட குதிரையில வந்து இந்தியாவை எட்டிப் பாத்தா…நம்மள ரிசீவ் பண்ண சந்திரகுப்தர் வெயிட் பண்ணுவாரு. அப்படியே அவரு கூட போயி சாணக்கியருக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு அசோகர் கூட போயி புத்தரைப் பாத்துட்டு, அப்படியே ஒரு எட்டு இயேசுங்கற குழந்தையைப் பாத்துட்டு வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தான்.
இந்த மாதிரி நகைச்சுவையான நடையில போரடிக்கற ஹிஸ்டரிய கோர்வையா பல புதிய தகவல்களுடன் தொகுத்து மதன் அவர்கள் எழுதிய புத்தகம் கிமு. கிபி. இது குமுதம்ல தொடராக வெளியாகி வாசகர்களின் வாசிப்புக்கு வசப்பட்டது.
பின் குறிப்பு : குரங்கிலிருந்து தோன்றிய முதல் மனிதனும் பெண், விவசாயத்தைக் கண்டுபிடித்ததும் ஒரு பெண் என பெண்கள் பெருமைப்படற மாதிரியான தகவல்களோட ரத்தம் குடிக்கற பெண் தெய்வத்தை பத்தியும் சொல்லிருக்காரு.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #historical #travel #madhan #ki.mu-ki.pi
Leave a Reply