ராஜராஜ சோழனும் விஞ்ஞானி ராஜாமணியும்

புத்தகத்தோட தலைப்பைப் பாத்த உடனே உங்கள்ள பலருக்கு ஆச்சரியமாவும் சிரிப்பாகவும் கூட இருக்கலாம். ராஜராஜ சோழன் டைம் மெசின் யூஸ் பண்ணி இந்தக் காலத்துக்கு வந்தா எப்படி இருக்கும்னு கற்பனையோட கொஞ்சம் காமெடியும் சேர்த்து நல்லா வெச்சு செஞ்சிருப்பாரு இந்த புத்தகத்தோட ஆசிரியர் யோகி(விஜயகுமார் ஜெயராமன்).

ராஜாமணி, நம்ம இந்தியாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி. டைம் மெசின் கண்டுபிடிக்கறது தான் அவரோட வாழ்நாள் லட்சியம். அவரோட நெடுநாள் கனவு நனவாக இன்னும் சிலமணி நேரங்களே இருக்க..ராஜாமணிக்கு கையும் ஓடல, காலும் ஓடல. ஒருவழியா அந்த கால இயந்திரம் ஓட ஆரம்பிச்சுது, முதல் முதலா 100 வருஷத்துக்கு முன்னாடி போயி பாக்கறதுக்காக 100-ஐ அழுத்த, கை நடுக்கத்துனால 1000-னு டைப் பண்ண..

1000 வருஷம் முன்னாடி போயிடற ராஜாமணிக்கு ராஜராஜ சோழனைப் பாக்கற மாபெரும் வாய்ப்பு கிடைக்குது. மாமன்னர் ராஜாமணியை நம்பாத பார்வை பாக்கறாரு. எப்படியோ முட்டி மோதி மாமன்னருக்கு சில எதிர்கால நிகழ்வுகளைப் பத்தி சொல்லி ஒருவழியா நம்ப வெக்கறாரு. வியப்பில் இருந்த மன்னர் எதிர்காலத்தைப் பாக்கணும்னு ஆசைப்படறாரு.

நிகழ்காலத்துக்கு வர்ற ரெண்டு பேரும் மொதல்ல தஞ்சை பெரிய கோவிலைப் பாக்கப் போறாங்க. கோவிலைப் பாத்து பிரமிச்சுப்போன மாமன்னரையும் ராஜாமணியையும் ஒரு கும்பல் கடத்த, கதை அல்லு  வுடுது.

ரெண்டு பேரும் எதுக்காக கடத்தப்படறாங்க? யார் கடத்தறாங்க? சதிகளைத் தாண்டி மாமன்னர் தன்னுடைய நாட்டுக்கு திரும்புனரா? என்பதே மீதி கதை. இவ்வளவு அழகா கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் முடிச்சு போட்டு கதையை காமெடியோட உச்சத்துக்கே கொண்டுபோயிட்டார் கதையின் எழுத்தாளர் யோகி.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #comedy #fiction #kids story #yogi #rajaraja chozhan #rajamani

download pdf : https://drive.google.com/open?id=1C-q4we2neswOP-THkDV0f0eLxMz3EA41

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: