அந்த 69 நாட்கள்! – Crime Novel

“ஆர்வம் ஆசையாக மாறும்போது அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்..”

சென்னையிலிருந்து கோவைக்கு வேலை சம்பந்தமாக வந்திருந்த வெங்கட், வழக்கமாய் தங்கும் தன்னுடைய நண்பன் கல்யாண் வீட்டிற்கு சென்ற போது அங்கு அவனைக் காணவில்லை. மேலும், அவனுடைய அறையிலிருந்த ரத்தத்துளிகள் வெங்கட்டையும், கல்யாணின் தங்கை ஆருத்ராவையும் கலக்கமடையச் செய்தது. இதற்கிடையில் கல்யாணின் விசித்திரமான நடவடிக்கையைப் பற்றி அவனுடைய தங்கை கூறியபோது ஏதோ தவறு நேர்ந்திருப்பதை வெங்கட் உணர்ந்தான். அவனுடைய அறையைப் போலீஸ் சோதனை போட்டபோது கிடைத்த டையரியைப் புரட்டியபோது கிறுக்கலாய் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் கேஸை மேலும் குழப்பத்துக்கு கொண்டு போனது.

கல்யாணைக் கண்டுபிடிக்க வைத்தீஸ்வரன் கோவிலில் ஏடு பார்க்க செல்லும் வெங்கட், ஆருத்ராவுக்கு அம்பாள் அடிமை சுவாமிகளிடமிருந்து கல்யாணைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் அவர்களை வியப்பின் விளிம்புக்கே கொண்டு சென்றது. இந்தக் கேஸில் திடீர் திருப்பமாய் கல்யாணுக்கும் அந்த 69 நாட்களுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடிக்கும் போலீசார்.

கல்யாண் வீட்டிலிருந்த ரத்தம் யாருடையது? கல்யாணின் வித்தியாசமான நடவடிக்கைக்கு என்ன காரணம்? கல்யாண் உயிரோடு மீட்கப்பட்டானா? அந்த 69 நாட்களுக்கு என்ன அர்த்தம்? கல்யாணுக்கும் அந்த 69 நாட்களுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? ஆச்சர்யமூட்டும் திருப்பங்களுடன் கதைக்கு தயாராகுங்கள்..

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #andha 69 naatkal

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=53

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: