“பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் களையெடுக்க அவதரித்த ஒரு நரசிம்ம அவதாரம் திலகா..”
யமுனாவைக் காதலிப்பதாக நடித்து அவளை தவறாக உபயோகப்படுத்தி நீலப்படம் எடுக்க நினைக்கிறான், திவாகர். அவளை ஏமாற்றி ஒரு விளம்பரக் கம்பெனிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு வேலை பார்க்கும் சரளா, திவாகருக்கு தெரியாமல் ஒரு கடிதத்தை யமுனாவிடம் கொடுத்து அவளை எச்சரிக்கிறாள். திடீரென்று சரளா கொலை செய்யப்படுகிறாள். இதற்கிடையில் திவாகர் பற்றிய உண்மைகள் யமுனாவிற்கு தெரிய வருகிறது. தன்னுடைய பாதுகாப்புக்காக மனித உரிமைக் கமிஷனிடம் உதவிக்கு கேட்டுச் சென்ற யமுனாவையும் அவள் தோழி சந்தியாவையும் தந்திரமாகக் கைது செய்யும் போலீசார்.
பல சூழ்ச்சிகளிலிருந்தும், போலீசிடமிருந்தும் தப்பிக்கும் யமுனா தலைமறைவாக டாக்டர் சரவணப் பெருமாள் வீட்டில் தங்குகிறாள். டாக்டரும், அவருடைய நண்பரான வக்கீல் ராம்பிரசாத்தும் யமுனாவிற்கு அடைக்கலம் கொடுக்க, அடுத்த நாள் தோழி சந்தியா கொலை செய்யப்பட்டு, யமுனா கொலைக்குற்றவாளியாகச் சித்தரிக்கப்படுகிறாள். இந்த செய்தியைப் பார்த்து உடைந்து போனாள் யமுனா. இதற்கு நடுவில் யமுனாவை ஏமாற்றிய ‘தி’வாகருக்கும், ‘ல’ட்சுமணதாஸுக்கும், ‘கா’யத்ரிதேவிக்கும் ஒரே மாதிரியான தி, ல, கா என்ற ரத்த எழுத்துக்கள் கொண்ட கடிதம் வருகிறது. சுதாரிப்பதற்குள் யமுனாவிற்கு எதிராகச் சதி செய்த திவாகரும், லட்சுமணதாஸும் உடல் பாளம் பாளமாக வெடித்துக் கோரமாகப் பலர் முன்னிலையில் மரணமடைகிறார்கள்.
காயத்ரிதேவிக்கு என்ன நேர்ந்தது? திவாகரையும், சந்திரசேகரையும் கொலை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? ரத்தக் கடிதம் அனுப்பியது யார்? யமுனாவின் உதவிக்குப் பின் உள்ள கதை என்பதே மீதி. பெண்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தை இந்தக் கதை ஆழமாகப் பதிவு செய்கிறது.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #dhik dhik thilaga
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=343