முதல் நிமிஷம் – Crime Novel

“குள்ளநரிக் கூட்டத்தை அழிக்க சிலவேளைகளில் சிங்கமும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டியிருக்கும்..”

புது மில்லினியம் 2000 பிறக்கப் போவதை முன்னிட்டு அதை வானில் கொண்டாட முடிவெடுத்த விமானிகளின் ஆசையை நிறைவேற்ற சீஃப் கமேண்டர் விக்ரம்சிங் மேலிடத்தில் அனுமதி வாங்கியிருந்தார். விமானத்தை பரிசோதித்த பிறகு, சரியாக 11.30-க்கு ஆரம்பித்து பைலட் முதல் ஸ்கேவன்ஞ்சர் வரை அனைத்து ஊழியர்களும் வானில் வட்டமடித்தபடியே நியூ இயர் கொண்டாட்டத்தில் இருந்தனர். வரவிருந்த அபாயத்தை உணராத ராதிகாவும் அவர்களுடைய கொண்டாட்டத்தில் சேர்ந்து கொண்டாள். விமானத்தின் கண்ட்ரோலை ஆட்டோ பைலட்டிடம் கொடுத்து விட்டு மனோவும், அசாரும் கூட பேசன்ஞ்சர் கேபினுக்கு சென்றார்கள். நன்றாகப் போய்க்கொண்டிருந்த விமானம் திடீரென அரபிக்கடலுக்குள் விழுந்து கொண்டிருந்தது. அப்போது மணி 12:01:01.

அதே நேரத்தில் ராதிகாவின் உயிர்த்தோழி மிருதுளா மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறாள். அவளின் தற்கொலை முடிவுக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க போலீஸாரின் உதவியை நாடுகிறான் மிருதுளாவின் காதலன் தாமோதர். இவ்வாறிருக்க அருண் என்பவன் மிருதுளாவை அடிக்கடி டார்ச்சர் செய்திருப்பதை தாமோதர் அறிகிறான்.

மிருதுளாவின் தற்கொலைக்குத் தூண்டியது யார்? ராதிகா இறந்ததற்கும் மிருதுளா இறந்ததற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? விமானம் மூழ்கியது விபத்தா? கொலையா? மிருதுளாவின் தற்கொலைக்கு காரணம் அருணா? உயிர்த்தோழிகள் இருவருக்கும் நேர்ந்தது என்ன? விசித்திரமான கேள்விகளுக்கு நடுவில் வெளிவரக் காத்திருக்கிறது உண்மை.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #mudhal nimisham

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=982

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: