சின்னதா இல்ல பெருசாவே கற்பனை பண்ணிக்கோங்க. உங்கள ஒரு நாட்டுக்கு ராஜாவா உக்கார வச்சு என்னவேணாலும் உத்தரவு போடுங்க மகாராஜானு கைகட்டி தலைகுனிஞ்சு உங்க முன்னாடி ஆயிரக்கணக்கான மக்கள் நின்னாங்கன்னா..(?) உங்க மனசுல என்னலாம் ஓடும்???
முறையான அரசாங்கம், அடிப்படை உரிமைகள் இருந்துமே நம்மள்ள பலபேர் நாட்டை கண்டபடி பேசறோம். ஆனா இப்ப இருக்கற அரசாங்கம் தலைவன், ராஜா, மகாராஜா, குடியரசுத்தலைவர்னு பரிணாம வளர்ச்சி அடைஞ்சதுதான். நாம கடந்து வந்த வரலாறு பல அப்பாவி மக்களோட இரத்தத்துமேல தான். சர்வாதிகாரின்னு சொன்னவுடனே ஹிட்லர் தான் ஞாபகம் வரும். ஆனா, முகில் எழுதுன இந்தப் புத்தகத்தைப் படிச்சா, ஹிட்லர் ஒரு கத்துக்குட்டி மாதிரி. அதிகாரம் தலைக்கேறும் போது ஆணவம் மட்டுமில்லை பல சமயம் வெறிகூட பிடிக்கும்.
உலகளாவிய ஒரு ராஜ வரலாறு, மன்னிக்கணும் கிறுக்கு ராஜாக்களோட வரலாறு, பழக்கம், தண்டனை முறை, அவங்க போட்ட சட்டம் இதையெல்லாம் வாசிக்கும்போது ஒரு சைக்சோ த்ரில்லரை விட சுவாரஸ்யமாக இருக்கும் இந்தப் புத்தகம், இரத்தம் தெறிக்கும். வருவார்கள் கிறுக்கு சைக்கோ ராஜாக்கள்.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #mugil #kirukku rajakkalin kadhai #torture kings
want to buy : https://www.goodreads.com/book/show/39980927-kirukku-rajakkalin-kathai