கீழடி – ஆராய்ச்சி முடிவுகள்

சமீபகாலமாக மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் சற்றே சலன அலைகளை பரப்பிய ஒரு வார்த்தையாகத் தான் இதைப் பார்க்கிறேன்.

கீழடி..

மத்திய அரசால் முடக்கப்பட்ட அகழ்வாய்வுப் பகுதியை தமிழ்நாடு அகழ்வாராய்ச்சிக் குழுத் துப்புரவாக ஆராய்ந்து, பல பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமாக உலகை உலுக்கும் சில உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. இந்த உண்மைகள் உலக அளவில் தமிழின் பெருமையை சற்றே உயர்த்தியுள்ளது. ஆனால், தமிழக மக்களிடையே ஏனோ இது பெரிதாக பார்க்கப்படவில்லை. ஏன் அதைவிட பெரிதான திரை உருவாக்கப்பட்டு இருக்கலாம். கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளின் மூத்த கலாச்சாரத்திற்கான ஆதார உண்மைகள் மற்றும் சில அரிய புகைப்படங்களுடன் தமிழக தொல்லியல் துறையின் வெளியீடாக “கீழடி – வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம்” என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. இதைப் படிக்கும்போது பலருக்கு கிமு.கிபி பற்றிய குழப்பங்கள் எழலாம். நாம் கணிதத்தில் எண் அளவுகோலைப் பார்த்திருப்போம். அதுபோல் தான் -1, 0, 1. அதேபோல் கிமு-0-கிபி. இது உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நாகரிகம். நாமும் தெரிந்துகொள்வோம். பகிர்ந்துகொள்வோம் நம் உணர்வுகளை.

இந்த அறிக்கையை இலவசமாக வாசிக்கக் கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.

*தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #keezhadi #tamilnadu government report #oldest civilization #tamizhi

download link : https://drive.google.com/open?id=1DUO9B67PcZQW3nVpwzqDpqC3hBuPcqgV

One thought on “கீழடி – ஆராய்ச்சி முடிவுகள்

Add yours

  1. நான் பார்த்த வரைக்கும் கீழடி நிறைய ஆகச்சிறந்த தகவல்கலை கொடுத்து கொண்டிருக்கிறது. ஆனால் என் ஐயம் என்னவென்றால் அரண்மனை மாளிகைகளுக்கான நேரிடை சான்றுகள் ஏதும் இல்லை என்பதற்கான காரணங்கள். அவை பற்றிய தகவல்களைக் கீழடி கொடுத்தால் மொழியியல் வரலாற்றை மாற்றி கட்டமைக்கலாம்.

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: