அதிரடி ஆட்டம்! – Crime Novel

“இந்தியாவிற்கு இந்தியாதான் பகைநாடு..”

ரூபலா மற்றும் கோகுல்நாத்துடன் விவேக் தனது மாருதி ஜென்னில் மகாபலிபுர ரோட்டில் இருந்த ஹோட்டலுக்குப் பறந்து கொண்டிருந்தான். அங்கிருந்து யாருமறியாமல் ஓய்வுபெற்ற விண்வெளித்துறை இயக்குநர் பட்டாச்சார்யாவைச் சந்திக்கத் திருக்கழுக்குன்றம் விரைந்தான். விவேக்கிற்கு விபரீதம் காத்திருந்தது. விவேக்கைக் கொல்ல எதிராளிகள் அவன் சென்றுகொண்டிருந்த காரில் மேக்னடிக் டையனமைட்டைப் பொருத்தினர்.

அதேவேளையில் நாஸா விண்வெளித்துறையைச் சேர்ந்த லூயிஸ் என்பவன் ‘ப்ராக்ரஸ்’ என்ற சர்வதேச விண்வெளி நிலையத்தின் உதவியுடன் எதிரி நாடுகளில் பூகம்பங்களையும், மணற்புயலையும் உருவாக்கி சுவிஸ் வங்கியில் பணத்தைக் குவித்துக் கொண்டிருந்தான். இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றான சென்னையில் வரலாறு காணாத வகையில், ஒரு பூகம்பத்தை உருவாக்கிப் பேரழிவை ஏற்படுத்துவதே இவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருந்தது. இந்நிலையில் ஈராஸ் விண்கல்லை ஒரு வல்லரசு நாட்டின் மீது திசைதிருப்பி விடும் வேலையும் படுஜோராக நடந்து கொண்டிருந்தது.

உண்மையறியாத விவேக் டையனமைட்டிலிருந்து தப்பினாரா? திருக்கழுக்குன்றத்தில் காத்திருந்த அதிர்ச்சித் தகவல் என்ன? சென்னையில் நிகழவிருந்த பூகம்பம் தடுக்கப்பட்டதா? ஈராஸ் விண்கல் வல்லரசு நாட்டைத் தாக்கியதா? விண்வெளி சம்பந்தமான புதிய தகவல்களுடன் விறுவிறுப்பையும் கூட்டி உங்கள் வாசிப்புக்காகக் காத்திருக்கிறது விவேக்கின் “அதிரடி ஆட்டம்”.

*மேலும் ராஜேஷ்குமாரின் பல விபரீதங்களுக்கு இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #athiradi aattam

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=668

2 thoughts on “அதிரடி ஆட்டம்! – Crime Novel

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: