விவேக் இருக்க பயமேன் II – Crime Novel

பணிச்சுமையிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க நண்பன் மனோவின் கெஸ்ட் ஹவுஸிற்கு சென்று விடுமுறையைக் கழிக்க ஆரம்பித்த முதல் நாளே ஒரு பிணம் கிடைக்க, விடுமுறையைத் தள்ளிவைத்து விட்டு கேஸிற்குள் மூக்கை நுழைக்கிறான் விவேக். அருகிலுள்ள வேறொரு எஸ்டேட் ஓனர் மீது விவேக்கிற்கு சந்தேகம் வர கேஸ் வேறொரு பரிமாணத்திற்கு நகர்கிறது. அதேவேளையில் தன்னுடனான பார்ட்னர்ஷிப்பை முடித்துக் கொண்டு, புதிதாக விளம்பரக் கம்பெனி வைக்கத் திட்டமிட்டிருக்கும் அமிர்தராஜைக் கொல்லநினைக்கும் பார்ட்னர் ஜோதிபாண்டியன். இன்னொரு பக்கத்தில் டில்லியில் பிரதமருடன் கைகோர்த்துக் கொண்டு தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்து, முதலமைச்சர் சிற்சிபையைக் கொல்ல சதித்திட்டம் தீட்டும் சக மந்திரிகள். இதனிடையே கேஸிற்குள்ளே புகுந்த விவேக்கிற்குத் தெரியவரும் திடுக்கிடும் உண்மைகள்.

மேலும் தெரிந்துகொள்ள, தொடர்ந்து வாசியுங்கள் விவேக் இருக்க பயமேன் II.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #vivek irukka payamen II

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=792

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: