விட்டுவிடு கருப்பா

சாதாரணமாக அடிக்க முடியாத கருப்பு கோயில் மணி அந்த நடுராத்திரியில் அடிக்க ஊரே திரண்டு சென்று பார்த்தால், அங்கே தலை வேறு முண்டம் வேறாக வெட்டுப்பட்டு கிடக்கிறான் ஊர்க்காவலன் வீரபாகுவின் மகன் நாச்சிமுத்து. அதேவேளையில் ஊரே கொள்ளை போகிறது. முக்கியமாக ஊரில் மதிப்புமிக்க தேவரின் வீட்டிலும் கொள்ளைக்காரர்கள் தங்களுடைய கைவரிசையைக் காட்ட, முதல் முறையாக அந்த கிராமத்திற்கு போலீஸ் வருகிறது.

இந்நிலையில் அரவிந்த் உடனான தன் காதலுக்கு கருப்பு சாமியிடம் சம்மதம் வாங்க தோட்டக்கார மங்கலத்திற்கு வருகிறாள் ரத்னா. ஆனால், கருப்பினால் தான் தன்னுடைய குடும்பமே சீரழிந்துவிட்டது என்று நம்பும் ரத்னா குடும்பத்தினர். அதற்கேற்ப தேவரின் மகனுக்கு செருப்பு தைப்பவனின் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க கருப்பிடமிருந்து உத்தரவு வர, ஊரைவிட்டே ஓடுகிறான் தேவரின் மகன் ராஜேந்திரன். ஆவி அலைவதால் யாரும் போக பயப்படும் காசுத்தோப்பு பங்களா மற்றும் நடுநடுவே வந்து எச்சரித்து செல்லும் வெள்ளை குதிரை என சுவாரஸ்யத்துக்கும், விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் சற்றும் ஓய்வில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் கதை இந்திரா சௌந்தரராஜன் எழுதிய “விட்டுவிடு கருப்பா”.

#one minute one book #tamil #book #review #thriller #indira soundararajan #vittuvidu karuppa

want to buy : https://www.amazon.in/Vittu-Karuppa-Tamil-Indira-Soundarajan-ebook/dp/B01MRFMLFF?ref=kindlecontentin50-21&tag=kindlecontentin50-21&gclid=Cj0KCQiAq97uBRCwARIsADTziyab6-pL-GdNsPj_xtdRYRWjoZ6g7x86ndkccrXmLn6FNQLeqdrRZbIaAgsbEALw_wcB

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: