நாகர்களின் இரகசியம்

தான் அழிக்க வேண்டிய தீமை சந்திரவம்சிகள் அல்ல என்பதை உணர்ந்த சிவன், நாகர்களின் மூலம் தான் தீமையை கண்டறிய முடியும் என்று எண்ணி, நாகர்களின் இருப்பிடத்தைத் தேடிச் செல்கிறார். நாகர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மகதம் வழியாக காசியை வந்தடைகிறது சிவனின் பரிவாரம். இந்நிலையில் சதி கருவுற்றிருக்க, சிவனுக்கும் சதிக்கும் ஒரு மகன்(கார்த்திக்) பிறக்கிறான். காசியிலிருந்து ப்ரங்காவை அடைந்து அங்கிருந்து நாகர்களைக் கண்டுபிடிப்பது தான் சிவனின் திட்டம். சதி கார்த்திக்கைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு காசியிலேயே தங்கிவிட சிவன் தன்னுடைய பரிவாரத்துடன் பயணத்தை மேற்கொள்கிறார். காசியில் தங்கியிருந்த சதிக்கு தன் வாழ்வின் முக்கியமான ஒரு உண்மை தெரியவர, நாகர்கள் வெளிப்பட அதுவே ஒரு காரணமாகிறது. தன் நீண்ட பயணத்திற்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த சிவன், நாகர்களின் ரகசியத்தைத் தேடி நாகர்களுடன் பஞ்சவடிக்குச் செல்கிறார். அங்கே அவருக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.

பிரகஸ்பதி..

காத்திருங்கள்! மூன்றாவது பாகம் வாயுபுத்ரர் வாக்கு!!

#one minute one book #tamil #book #review #amish tripathi #secret of nagas #pavithra srinivasan #naagargalin ragasiyam

want to buy : https://www.commonfolks.in/books/d/naagargalin-ragasiyam

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: