ரெட் அலர்ட் – Crime Novel

“குற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க, தண்டனையின் தன்மையும் மாறுகிறது..”

ஆபிசிற்கு ரெடியாகி கிளம்ப யத்தனித்த இன்ஸ்பெக்டர் சௌந்தர்யாவிற்கு கமிஷனரிடமிருந்து உடனடி அழைப்பு வர ஸ்கூட்டரில் பறந்தாள். அங்கே அவளுக்காக ஒரு வினோதமான கேஸ் காத்திருந்தது. ப்ளஸ் 2 படிக்கும் விநோதினி என்ற மாணவி மரணம். தற்கொலை கேஸ் என்று எண்ணப்பட்டு வந்த விநோதினியின் மரணம் கொலை கேஸாக மாறக் காரணம் அவள் வயிற்றில் வளர்ந்திருந்த இரண்டு மாதக் கரு. மறைமுகமாக கண்டுபிடிக்கச் சொல்லி வந்த உத்தரவை ஏற்று விசாரணையை விநோதினி பெற்றோரிடமிருந்து ஆரம்பிக்க எண்ணிய சௌந்தர்யாவிற்கு வந்து சேர்ந்தது விநோதினி பெற்றோரின் மரண செய்தி. மேலும் விநோதினி படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் விசாரிக்கச் சென்ற இடத்தில் ஒரு க்ளூவும் கிடைக்காமல் போகவே கேஸின் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க தனக்கு வந்த மிரட்டல்களுக்கும் நடுவே போராடினாள் சௌந்தர்யா.

விநோதினி மற்றும் அவள் பெற்றோர் கொலை செய்யப்பட்டனரா? விநோதினியின் வயிற்றில் வளர்ந்த கருவிற்கு யார் காரணம்? சௌந்தர்யாவிற்கு ரெட் அலர்ட் விடுத்தது யார்? சமுதாயத்தில் நிகழும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒரு பெண் போலீஸின் கதை.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #red alert

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1076

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: