காத்மாண்டுவில் தான் வேலை செய்வதாகவும், தன்னைப் போலவே அச்சு அசலாக இருக்கும் இன்னொரு நபர் தனக்கு எதிராக சூழ்ச்சி செய்து தன்மேல் பழிவரச் செய்ய எண்ணுவதாகவும் ஃபெலுடாவிடம் கூறிய பத்ரா தனக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறார். அன்று இரவே அணிகேந்திர சோம் என்பவர் ஃபெலுடாவிற்கு போன் செய்து அவரை சந்தித்து ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றி அவரிடம் பேச விரும்புவதையும் தெரிவித்தார். அதற்கு அடுத்த நாளே அணிகேந்திர சோம் கொலை செய்யப்பட, கொலையாளியை கண்டுபிடிக்க ஃபெலுடா, தொப்ஷே மற்றும் லால்மோகன் பாபு மூவரும் காத்மாண்டு விரைந்தனர். அங்கு சென்ற அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. ஏற்கனவே வழக்கில் மாட்டி ஃபெலுடாவினால் தண்டனை பெற்ற மகன்லால் வெளியே வந்து மறுபடியும் ஃபெலுடாவிற்கு தொல்லை கொடுக்கிறான். இதற்கிடையே வெளிவரும் போலிமருந்துகள், கள்ளநோட்டுக்கள், கலப்பட மருந்துகள் பற்றிய உண்மை.
ஒரு கொலை இரு கொலையாக மாறியது எப்படி? அணிகேந்திர சோமைக் கொன்றது யார்? பத்ராவின் உண்மையான முகம் என்ன? முன்னால் குற்றவாளி மகன்லாலின் நோக்கம் என்ன? இதற்கு பின்னால் இருக்கும் கும்பலைப் பற்றிய தகவல்கள் பரபரப்பைக் கூட்டி படிப்பவரை வியக்கவைக்கும்.
#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda #kathmandu kollaiyargal
want to buy : https://www.panuval.com/kathmandu-kollaiyargal-3680549
Leave a Reply