இந்தியாவின் புராதன சிலைகளைத் திருடி வெளிநாட்டிற்கு விற்கும் ஒரு கும்பலைத் தேடிப் புறப்படுகிறார் ஃபெலுடா. குற்றவாளியிடம் இருக்கும் தலையில்லாத யக்ஷி சிலையைத் தேடிச் செல்லும் வழியில் ஒரு விமான விபத்து ஏற்படுகிறது. இதற்கிடையே முக்கியக் குற்றவாளியான மல்லிக் அவுரங்காபாத் புறப்பட்டுச் செல்ல அவரைப் பின்தொடர்ந்து செல்லும் ஃபெலுடாவிற்கு மல்லிக்கின் நோக்கம் தெரியவருகிறது. அதே நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக அங்கே வரும் சுற்றுலாப் பயணி ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இந்நிலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மாறுவேடத்தில் வருகிறார் ஃபெலு. இவை அனைத்தையும் தாண்டி இறுதியில் ஃபெலுடா சிலையை மீட்டு கொலையாளியை எப்படி நெருங்கினார் என்பதே மீதிக்கதை.
#one minute one book #tamil #book #review #feluda #satyajit ray #kailashil oru kolaiyali
want to buy : https://www.commonfolks.in/books/d/kailashil-oru-kolaiyali
Leave a Reply