வெள்ளை நிழல்! – Crime Novel

ஈஸ்வரி தன்னுடைய அப்பாவிடம் தன் காதலைப் பற்றியும் கிரிதர் பற்றியும் கூற வெகுண்ட கோபாலகிருஷ்ணன், கிரிதரை நேரில் சந்திக்க வரச் சொல்கிறார். அவனுடைய அந்தஸ்தை முன்னிறுத்தி அவனை அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார் ஈஸ்வரியின் அப்பா. அவரை விட ஒருபடி மேலே வந்தபிறகு தான் இருவருக்கும் திருமணம் என்று முடிவெடுத்த அவன் அயராது உழைத்து முன்னேறுகிறான். கல்யாணம் ஈஸ்வரி அப்பாவின் சம்மதத்துடன் சிம்பிளாக நடக்க, ஒரு வாரத்திலேயே  அவளை விட்டு தனியாக மெட்ராஸ் செல்கிறான். திடீரென ஒருநாள் ஈஸ்வரி தற்கொலை செய்துகொண்ட செய்தி அவனை வந்து சேர்கிறது. ஈஸ்வரி கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பும் கோபாலகிருஷ்ணன் தனியார் டிடெக்டிவ்விடம் உதவி கோருகிறார்.

ஈஸ்வரியின் தற்கொலைக்கு காரணம் என்ன? அது கொலையா? தனியார் டிடெக்டிவ் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்தனரா? கிரிதர் அவளை விட்டு சென்றதன் பின்னணியில் ஏதாவது காரணம் உள்ளதா? என்பதை கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vellai_nizhal

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=707

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: