தலையுதிர் பருவம் – Crime Novel

புதிதாக திருமணமான சரவணகுமாரும் மதுலிகாவும் முன்னிரவு நேரத்தில் நண்பன் ரவிஷங்கரின் கெஸ்ட் ஹவுஸ் போய்ச் சேர்ந்த போது காற்றில் சில்வண்டுகளின் சப்தம் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தியது. வாட்ச்மேனும் சொந்த வேலையாக வெளியே சென்றுவிட ஆளரவமற்ற அந்த அத்துவானக் காட்டில் இருவரும் தனித்து விடப்பட்டனர். திடீரென இரவில் அறைக்கு வெளியே யாரோ நடக்கும் சப்தம் கேட்க திடுக்கிட்டு விழித்த மது கணவனிடம் தான் கேட்டதைக் கூற இங்கிருந்து கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து டெலிபோன் இணைப்பு துண்டிப்பு, மின் இணைப்பு துண்டிப்பு, ரவிஷங்கரின் தலை துண்டிப்பு என அடுத்தடுத்து வரும் திடுக்கிடும் நிகழ்வுகள் படிப்பவரைத் திணறடித்து மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1139

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #thalaiyudhir_paruvam

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: