“ரோட்டுல தூரத்துல இருந்து பாக்கறப்போ தெரியற தண்ணி பக்கத்துல போகப்போக மறைஞ்சு போகுதே ஏன்..?
வானம் ஏன் நீல கலர்ல தெரியுது..?
இடி இடிக்கும்போது ஏன் மரத்துக்கு கீழ நிக்கக் கூடாது..?
மரக்கட்டை ஏன் தண்ணில மிதக்குது..?
தண்ணியில எண்ணெய் ஏன் கரைய மாட்டிக்குது..?
ஓடற பஸ்ல இருந்து இறங்கக்கூடாது ஏன்..?”
இதுமாதிரியான நிறைய கேள்விகள் உங்களுக்குள்ளயும் கண்டிப்பா இருந்திருக்கும். இந்த எல்லாக் கேள்விகளுக்குமான ஒரே பதில் சயின்ஸ், அதாவது அறிவியல். எப்பவும் நாம மனப்பாடம் பண்ற அறிவியல் பத்தி இந்தப் புத்தகத்துல கண்டிப்பா பாக்கப் போறது இல்லன்னு முன்னாடியே சொல்லிடறேன். இந்த உலகத்துல எல்லாத்துக்கும் விதிகள் இருக்கற மாதிரி அறிவியலுக்கும் சில விதிகள் இருக்கு, மேல இருக்கற கேள்விகளுக்கும் இந்த விதிகள் மூலமா விடை கண்டுபிடிக்க முடியும்.
சாதாரணமா நாம கடந்துபோற நிறைய விஷயங்கள்ள இருக்கற அறிவியலை நமக்கு எளிமையான முறையில செயல்வடிவத்தோட கத்துக் குடுக்கறது தான் இந்தப் புத்தகத்தோட நோக்கம். “இந்து தமிழ்” – மாயா பஜார்ல வெளிவந்த “அடடே அறிவியல்” தொடரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சோதனைகளின் தொகுப்பு தான் இந்த “அறிவியல் 1000”.
want to buy : https://www.commonfolks.in/books/d/ariviyal-1000
#one_minute_one_book #tamil #book #review #science #ariviyal_1000 #hindu_tamil_dhisai #maya_bazaar #adade_ariviyal #a_suppaiya_pandiyan
Leave a Reply