மலையருவி

தலைப்பைப் பார்த்தவுடனே கவிதைத் தொகுப்புன்னு நினைச்சிராதிங்க, மலையருவி – தமிழ் நாடோடிப் பாடல்களின் தொகுப்பு.

ஒரு குழந்தை பிறந்தவுடன் பாடும் தாலாட்டில் ஆரம்பித்து, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நிகழும் சூழ்நிலைகளைக் கூறும் ஆண்-பெண் தர்க்கம், தெய்வம், கும்மி, கள்ளன் பாட்டு, தொழிலாளர் பாட்டு, தெம்மாங்கு, ஒப்பாரி எனும் பாடல்களின் தொகுப்பாக அமைந்திருக்கும். வேலைக்கு இடையே சலிப்பு ஏற்படாமல் இருக்க பாடப்பட்டவையே இந்த நாடோடிப் பாடல்கள். ஒவ்வொரு பாடல் வரிகளும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்திருக்கும். அதாவது வியப்பு, இன்பம், ஏமாற்றம், ஏக்கம், ஆர்வம், எதிர்பார்ப்பு, கேலி, அறிவுரை, ரசனை, நெறி, தர்க்கம் மற்றும் சோகம் அனைத்தும் வரிகளில் பொதிந்திருக்கும்.  தமிழ் நாடோடிப்பாடல்கள் அருகி வரும் இந்தக் காலத்தில், தமிழின் பெருமையையும் தமிழர்களின் வாழ்க்கை முறையையும் அறிந்துகொள்ள உதவும் ஒரு சிறந்த பெட்டகமாக இப்புத்தகம் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

UPSC மெயின்ஸ் தேர்வில் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் எழுதிய நூல் மலையருவி.

இந்தப் புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்து படிக்க, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

#one_minute_one_book #tamil #book #review #upsc_mains #tamil_literature #ki_va_jagannath #malaiyaruvi

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: