புத்தம் சரணம் கச்சாமி!

திபெத்தை தன் வசப்படுத்த சீனர்கள் கௌதம புத்தரின் மறுபிறப்பான மைத்ரேயரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டம் தீட்டினர். சீனாவின் பிடியில் மாட்டிக்கொண்டிருந்த திபெத்தியர்கள், தங்களுடைய கடவுளாக கருதும் மைத்ரேய புத்தருக்கு சீன உளவுத்துறை மூலமாக ஆபத்து வரவிருப்பதை உணர்ந்தார்கள். பத்து வயதே ஆன இளம் மைத்ரேயரைக் காப்பாற்ற பிரதமரிடம் ஆலோசித்து அமானுஷ்யனிடம் உதவி கோருகிறார், தலாய்லாமா. தன் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக  மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த அமானுஷ்யன், அந்த அழைப்புக் கடிதம் வந்தபோது தான் திபெத்தில் ஆரம்ப காலத்தில் தன்னுடைய குரு தன்னிடம் எதிர்பார்த்திருந்த குருதட்சிணை அவனுக்கு நினைவுக்கு வந்தது. மாட்டிக்கொண்டால் உயிர்போய்விடும் நிலையிலும் அமானுஷ்யன் இதற்கு ஒப்புக்கொண்டு மைத்ரேயரை அழைத்துவர திபெத் சென்றான். 

ஆரம்பத்திலேயே உளவாளிகள் தன்னையும் மைத்ரேயரையும் தொடர்கிறார்கள் என்று ஊகித்த அமானுஷ்யன் காற்றில் மறைந்து அவர்களுக்கு கண்ணாமூச்சி காட்டினான். மைத்ரேயருக்குரிய எந்த சாயலும் அந்தச் சிறுவனிடம் இல்லாததைக் கண்ட அமானுஷ்யன் மனதில் குழப்பம் எழுந்தது. ஒருநாள் இரவில் மைத்ரேயன் என்றழைக்கப்பட்ட அந்தச் சிறுவனின் வலது காலில் இருந்த தர்மசக்கரம் பொன்னிறத்தில் மின்னி சுழன்று நின்றபோது அமானுஷ்யனின் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. எப்போதும் அமைதியாக முகத்தில் எந்த சலனமும் காட்டாமல், மந்தகாசப் புன்னகை புரியும் அந்தச் சிறுவன் ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்தான். எல்லாவற்றிக்கும் மேலாக மைத்ரேய புத்தரைக் கொல்லக் காத்திருக்கும் தீயசக்திகளின் தலைவனான மாராவின் குழு.

கடவுளான மைத்ரேயருக்குத் தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்காதது ஏன்? கொடுத்த வாக்குறுதியை அமானுஷ்யன் காப்பாற்றினானா? மாராவின் பின்னணி என்ன? லீ க்யாங் பின்னிய சதிவலையில் அமானுஷ்யன் மாட்டிக்கொண்டானா? மந்தகாசப் புன்னகை சிந்தும் அந்தச் சிறுவன் உண்மையில் யார்? நிஜ மனிதர்களை கற்பனையில் பயன்படுத்தி எடுத்துக் கொண்ட தலைப்பை நிஜமாக்கியிருக்கிறார் என்.கணேசன்.

புத்தம் சரணம் கச்சாமி!

இது போன்ற என்.கணேசன் அவர்களின் புத்தகத்தை இலவசமாக வாசிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக்கவும்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #amanushyan #n.ganesan #butham saranam katchami

want to buy : https://www.amazon.in/Butham-Saranam-Katchami-N-ganesan/dp/9381098344/ref=sr_1_7?qid=1571044862&refinements=p_27%3AN.Ganesan&s=books&sr=1-7

want to read free : http://enganeshan.blogspot.com/

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: