விவேக் தன் முழங்கையில் பிசுபிசுத்த அந்த உலராத ரத்தத்தைப் பார்த்தவாறு இருட்டில் ஆழ்ந்திருந்த பங்களாவின் பின் வராந்தாவிற்கு வந்து பாத்ரூமை நோக்கி நடந்தான்.
ருத்ரமூர்த்தியும் அவர் குடும்பமும் ஒரு வாரத்திற்கு முன்புதான் அந்த பங்களாவிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். வந்த முதல்நாளே அமானுஷ்யங்கள் விரட்டத் தொடங்கியிருந்தது. அழுகிய தலையற்ற உடல், பேசி நகரும் பல் இளித்த மனித தலை, புகை உருவம், பூசாரியின் கோர கொலை, ருத்ரமூர்த்தியின் மருமகளின் மரணம்.
இவையனைத்தும் நம்பூதிரி சொல்படி இது ‘பச்சோரா’ வகை ஆவியின் வேலையா? அல்ல ஏதேனும் ஆசாமியின் வேலையா? அப்படி ஆசாமியின் வேலையாக இருந்தால் எந்த காரணத்துக்காக இவ்வளவும்..? ஆவியாக இருந்தால் ஏன் இன்னும் ருத்ரமூர்த்தியும் அவரின் குடும்பமும் தனது பழைய பங்களாவிற்கு திரும்பிச் செல்லவில்லை என்ற எண்ண ஓட்டங்களுடன் பாத்ரூமிற்கு வந்து சேர்ந்தான் விவேக். குழாயைத் திறந்தவன் அதிர்ந்தான்..குழாயில் நீருக்குப் பதிலாக ரத்தம் பீறிட்டது. விவேக் ஓட்டம் பிடித்தான் அங்கிருந்து.
#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #ularatha rattham