வாஷிங்டனில் திருமணம்

கல்யாணம்..

கல்யாணம்னு சொன்ன உடனே பலருக்கு நினைவுக்கு வர விஷயம் பெரும்பாலும் சோறுதான். ஆனால், அதையும் தாண்டி நம்ம திருமண முறைகள் ரொம்பவும் விசித்திரமானது மற்றும் சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைஞ்சது.

பொதுவா ஒரு பழமொழி இருக்கு..”வீட்டைக் கட்டிப் பாரு, கல்யாணத்தைப் பண்ணிப் பாரு”..

கல்யாணத்துக்குப் பொருத்தம் பாக்கறதுல இருந்து பந்தில நடக்கற பங்காளி சண்டை வரைக்கும், தேர இழுத்து தெருவுல விட்ட மாதிரி ஜேஜேனு எல்லாம் நடந்து முடிஞ்சிரும்.

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கற்பனைக்கு கைகால் இல்லை. உங்க கல்யாணத்த எக்ஸ்சிபிசன் (exhibition) மாதிரி நடத்துனா, அது நம்ம ஊர்ல நடக்காம வெளிநாட்டுல நடந்தா, பெரிய பட்ஜெட் படம் எடுக்கற மாதிரி, உங்க கதைக்கு (கல்யாணத்துக்கு) வேற ஒருத்தர் செலவு செஞ்சா, உங்க கல்யாணத்த கிரிக்கெட் மாதிரி லைவ் டெலிகாஸ்ட் பண்ணுனா..? இந்த வேடிக்கையெல்லாம் தான் ‘சாவியின் வாஷிங்டனில் திருமணம்’.

அமெரிக்காவில் இருக்கற பெரிய பணக்கார அம்மாவோட விருப்பத்துக்காக தென்னிந்தியாவில் நடக்கற மாதிரியான ஒரு கல்யாணத்த வாஷிங்டனில் ஏற்பாடு செய்யறாங்க. இதுக்கு மக்கள் கிட்டயிருந்து ஏகோபித்த வரவேற்பு இருக்க போக வாஷிங்டனே களைகட்டுது. அப்பளம் பறக்கும் தட்டா மாறுது, நரிக்குறவர்களெல்லாம் ராஜவம்சமா மாறராங்க, அதுமட்டுமில்ல நாய்கள் (street dogs) எல்லாம் பாட்டுப் பாட பிளேன்ல அமெரிக்கா போகுது, எள்ளுல இருக்க எண்ணெய கண்டுபிடிச்ச ரெண்டு இந்திய ஞானிகள் கிட்ட சிக்கி அல்லோலகல்லோலப்பட்டது வாஷிங்டன் மற்றும் பலர்.

கோடிகோடியாக் கொட்டுனாலும் பாக்க முடியாத கல்யாணத்த, கற்பனையிலேயே நடத்திட்டாரு சாவி எனும் சா.விஸ்வநாதன்.

இந்தக் கதை நாற்பதுகளில், ஆனந்த விகடனில் பதினோரு வாரங்கள் தமிழில் ஒரு முழுநீள நகைச்சுவைத் தொடராக வெளிவந்தது. வாசகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கிளாசிக் காமெடி சீரீஸ்.

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வாஷிங்டனில் நடக்கப்போற இந்தத் திருமணத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

புண்பட்ட மனசை புக்கைப் படிச்சு ஆத்துங்க😉

இந்தப் புத்தகத்த நீங்களும் படிச்சுப் பாருங்க. கீழ இருக்கற லிங்க்ல புத்தகத்தப் பதிவிறக்கம் பண்ணிகோங்க. மேலும் இந்தப் புத்தகத்தோட ebook லிங்க் கொடுக்கப்பட்டிருக்கு.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #comedy #saavi #washingtonil thirumanam

drive link : https://drive.google.com/file/d/1zeYHyBD6nW0DzHUT1BOUWdKnOxE3MEbY/view?usp=sharing

e-book link : https://archive.org/details/WashingtonilThirumanam-saavi/page/n37

amazon link : https://www.amazon.in/Washingtonil-Thirumanam-Saavi/dp/8183683746

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

One thought on “வாஷிங்டனில் திருமணம்

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: