இயற்கை விதிகள்..
மிகவும் துல்லியமான, சக்திமிகுந்த, கடவுளின் கோட்பாடுகள்.
அவை ஏற்கனவே பல மடங்கு மேம்பாடடைந்து அண்டத்தை இயக்குகிறது.
இதில் அறிவியல் விதிகள் இயற்கையின் சொற்ப விந்தைகளை புரிந்துகொள்ளும் அளவே வளர்ந்திருக்கிறது. அதிலும் மனிதனின் கோட்பாடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு compact edition-தான் இந்த modern technology.
2020..
ரோபோக்களும் மனிதர்களும் இணைந்து வாழும் ஒரு புது யுகத்தின் தொடக்கம்.
நிலா எனும் ஒரு அழகிய பெண்ணும், ஜீனோ எனும் ஒரு இயந்திர நாயும், இவர்களுடன் மனிதனும் அல்லாமல் இயந்திரமும் அல்லாமல் இரண்டுங்கெட்டானாக ஒரு இளைஞன், மூவரும் சென்னையின் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். நிலாவும் ஜீனோவும் அவனை சிபி என அழைத்தார்கள்.
ஆம்..! ஜீனோ ஒரு பேசும் இயந்திர நாய்..(?!)ஆனால், அதன் உரிமையாளர் ரவி. ரவி இரண்டு நாட்களுக்கு முன்பாக நிலாவின் குடியிருப்பைப் பகிர்ந்து கொள்வதற்காக வந்தவன். அன்று மாலை தான் நிலாவின் கணவன் சிபி காணாமல் போனான்.
தான் வாசித்த புத்தகத்தில் இருந்த தமிழ் கவிதையைப் பாடிக்கொண்டு நடந்து வந்த ஜீனோவைப் பார்த்து நிலா ஒரு கேள்வி கேட்டாள்.
“எதற்காக இந்த ஜீவா அரசாங்கம் என் கணவருக்குப் பதிலாக வெறும் அற்ப செயல்பாடு கொண்ட இந்த ரோபோவை, இவன்தான் உன் கணவன் என என் தலையில் கட்ட வேண்டும்..? “சிபியை என்ன செய்தார்கள்..?”
#one_minute_one_book #tamil #book #review #science_fiction #aanandha_vikatan #sujatha #en_iniya_iyanthira
Leave a Reply