மனைவி மைத்ரேயி வந்த நேரம் தான், தன்னுடைய கம்பெனியின் முன்னேற்றத்திற்குக் காரணம் என்று பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தான் தினேஷ். ஆனால், மைத்ரேயியோ அதற்கு நேர்மாறாக கணவனை ஏமாற்றிக்கொண்டே தன் முன்னாள் காதலன் பாஸ்கருடன் தவறான தொடர்பு வைத்திருந்தாள்.
இதற்கிடையில் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் தினேஷை ஒரேயடியாக தீர்த்துக்கட்டி விட்டு இருவரும் சந்தோசமாக இருக்க முடிவு செய்கின்றனர். இந்நிலையில் திடீரென ஒரு பெண் போன் செய்து மைத்ரேயியை மிரட்டுகிறாள். பாஸ்கருடனான தொடர்பை விட்டுவிட வேண்டும் என்றும் இனி கணவனுடன் ஒழுங்காக வாழ்க்கை நடத்த சொல்லியும் எச்சரிக்கை விடுக்கிறாள்.
மிரட்டல் பேர்வழியைப் பிடிக்கத் திட்டம் போட்ட இருவரும் தினேஷின் ஆபிஸ் ஆட்களில் இருந்து தேடலைத் தொடங்குகின்றனர். போன் நம்பரின் லொகேஷனை கண்டுபிடித்த இருவருக்கும் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. மிரட்டல் பேர்வழி பெண் அல்ல பட்டாபி என்ற ஆண் என்று..!
முதலாளியிடம் கொண்டுள்ள விசுவாசத்தால் தான் போன் செய்து மிரட்டியதாக ஒப்புக்கொண்ட பட்டாபியை பாஸ்கர் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறான். இறந்த அவனை டிஸ்போஸ் செய்ய காரை எடுத்துக்கொண்டு பாஸ்கர்-மைத்ரேயி கிளம்ப, எதிர்பாராத விதமாக தினேஷின் அத்தை-மாமா ஊரிலிருந்து வருகை தர என அடுத்தடுத்த குழப்பங்கள்.
ஆபிஸ் விஷயமாக டெல்லி சென்றிருந்த தினேஷ் சென்னை திரும்பும் அவன் வரும் வழியில் லாரி மோதி அவன் விபத்திற்குள்ளாக, அவனை மொத்தமாக தீர்த்துக்கட்ட காத்திருக்கும் பாஸ்கர்-மைத்ரேயி. கடவுள் யார் பக்கம் இருந்து, யாரைக் காப்பாற்றினார்..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #udaintha_iravu
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=281
Leave a Reply