அக்கறையாய் ஒரு அக்கிரமம் – Crime Novel

கார்த்தீஷ்-நிகிலாவின் எதிர்வீட்டிற்கு புதிதாக ஜெயபால்-ஹேமா தம்பதி குடிவருகின்றனர். முன்பகை காரணமாக சண்டை போட்டு பிரிந்திருந்த முன்னாள் நண்பன் ஜெயபாலைப் பார்த்த கார்த்தீஷ் வெகுண்டான். சமாதானப்படுத்த வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயபாலை சந்திக்க மறுக்கிறான் கார்த்தீஷ்.

லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொருட்களைக் கடத்த திட்டம் போட்ட கும்பலைப் பிடித்துக்கொடுத்த ஃபாரஸ்ட் ரேஞ்ச் ஆபிசர் கார்த்தீஷைப் பழிவாங்குவதற்காக அவன் வீட்டிற்குள் நுழைகிறான் ஒருவன். வீட்டில் அவன் மனைவி நிகிலா மட்டுமே இருக்க, அவளை மிரட்டி கார்த்தீஷ் வரும்வரை காத்திருந்து அவனிடமிருந்து கேஸ் வாபஸ் பெற கையெழுத்து வாங்கக் காத்திருக்கிறான்.

இதற்கிடையில் ஃபிரிட்ஜ்ஜில் இருந்து ஆப்பிளை எடுத்து சாப்பிட்ட மிரட்டல் பேர்வழி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்து போகிறான். காட்டில் சந்தனம் கடத்துவதாகவும் அதைக் கண்டும் காணாமல் இருப்பதாகவும் கார்த்தீஷ் மீது பழிசுமத்த யாரோ எழுதிப்போட்ட மொட்டைக்கடுதாசியால் இரவு வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவன் பிணத்தைப் பார்த்ததும் அதிர்ந்து போகிறான்.

போலீசிடம் சொல்ல பயந்த இருவரும் நடுஇரவில் பிணத்தை அப்புறப்படுத்த நினைத்து செயல்படுகிறார்கள். ஆனால், அவர்கள் ஓட்டிவந்த காரின் பின்னாலேயே வந்த சப்-இன்ஸ்பெக்டர் பிணத்துடன் அவர்களை மடக்குகிறார்.

இறந்த அந்த கடத்தல்காரனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் சாவுக்கு காரணம் கார்த்தீஷின் வீட்டில் சாப்பிட்ட ஆப்பிள் என்றும்..அதில் சயனைட் விஷம் கலந்திருந்ததும் தெரியவருகிறது. உண்மையை அறிந்த கார்த்தீஷ்-நிகிலா இருவரும் உறைந்து போகின்றனர். இதற்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டது யார்..? என்பதை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபால் கண்டுபிடித்தாரா..? பிரிந்த நண்பர்கள் இருவரும் இணைந்தனரா..? மேலும் விபரங்களுக்கு அக்கறையாய் ஒரு அக்கிரமம்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #akkaraiyaai_oru_akkiramam

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1188

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: