33 புதிய சிந்தனை வெற்றிக் கதைகள்.!

ஃலைப்-ல ஜெயிக்கறதுக்கு இங்க நிறைய பேருக்கு மோட்டிவேசன்னு ஒண்ணு கண்டிப்பா தேவைப்படுது. அது ஃசெல்ப் மோட்டிவேசனா இருந்தாலும் சரி, இல்ல ஒருத்தர்கிட்ட இருந்து கிடைக்கற மோட்டிவேசனா இருந்தாலும் சரி. இப்படி ஒவ்வொருத்தருக்குமே அவங்க ஃலைப்-ல ஏதாவது ஒரு சில எடத்துல கண்டிப்பா மோட்டிவேசன் தேவைப்பட்டிருக்கும்.

ஜெயிக்கற எல்லாருமே அவங்க எதைப் பாத்து, இல்ல யாரைப் பாத்து மோட்டிவேட் ஆனாங்கன்னு ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி சொல்லிருப்பாங்க. அப்படிப்பட்ட ஒரு மோட்டிவேசன் புக் தான் இந்த சிந்தனை வெற்றிக் கதைகள்.

சாமர்த்தியம், திறமை, தொழில் நுட்பம், தத்துவம், நம்பிக்கை, நிர்வாகம், வாய்ப்பு, நேர்மறை-எதிர்மறை எண்ணங்கள், எதிர்பாராமை, உழைப்பு, தந்திரம், திட்டம், துணிச்சல் இப்படி இன்னும் பல வித்தியாசமான  மற்றும் நுணுக்கமான விசயங்களை முன்னெடுத்து இந்தப் புத்தகத்தைத் தொகுத்துள்ளார் ஆசிரியர் எஸ். லாரன்ஸ் ஜெயக்குமார்.

அனைவரும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில், சுலபமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி, கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அத்தியாயமும் சிறுகதைகளாகக் கொடுக்கப்பட்டுள்ளதால் புத்தகத்தைப் படித்து முடிப்பதே தெரியாமல் அடுத்து என்ன..? என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இப்புத்தகம் அமைந்திருப்பது மேலும் சிறப்புக்குரியது.

#one_minute_one_book #tamil #book #review #motivation_story #s_lawrence_jeyakumar #33_pudhiya_sindhanai_vetri_kadhaigal

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: