புரபொசர் சூர்யநாராயணன் திடீரென கண்விழித்த போது, தான் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார். இதற்கு முன் நடந்த சம்பவங்கள் அவரது மனதில் ஓடின. ஜனாதிபதி கையால் விருது வாங்கக் காத்திருந்த அவர் திடீரென வியர்த்துக் கொட்டி, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்திருந்தார்.
அந்த அறையில் இருந்த இருவர், புரபொசரைக் கேள்வியால் துளைத்துக் கொண்டிருந்தனர். அவர்களது கேள்வி இதுதான்..
பயோஸான் 4 நுண்ணுயிர்கள்!!
அதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது மறுத்துக் கொண்டிருந்த புரபொசருக்கு முன்னால், அவர்கள் கடத்தி வந்த ரேஷ்மா என்ற பெண்ணிற்கு அந்த பயோஸான் 4-ஐ அவளுக்குப் பரிசோதித்தார்கள். வயிற்றிலிருந்து ரத்தம் பீறிட, அந்த நொடியே இறந்து போனாள் ரேஷ்மா.
புரபொசரின் மனைவியை வைத்து அவர்கள் மிரட்ட, அஸ்ஸாமில் உள்ள பவளப் பள்ளத்தாக்கிற்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டாவெறுப்பாக ஒத்துக்கொண்டார் சூர்யநாராயணன்.
சந்தேகத்தின் பேரில் விசாரித்துக்கொண்டிருந்த போலீஸ் பட்டாளம், சூர்யநாராயணனைக் கடத்தி வைத்திருந்த கிரணின் வீட்டை அடைந்தது. உஷாரான கிரண், புரபொசரை அவன் வீட்டின் பின்புறம் அவுட்ஹௌசிற்கு கீழே இருந்த பாதாள அறைக்குள் அடைத்து வைக்கிறான்.
பயோஸான் 4 நுண்ணுயிர்களை வெளிநாட்டுத் தீவிரவாத கும்பலுக்கு கோடிக்கணக்கில் விற்று காசாக்க திட்டம் போட்ட கிரண், திட்டப்படியே சூர்யநாராயணனின் மனைவி லட்சுமியைப் பிணையக் கைதியாக வைத்து, அவரை மாறுவேடத்தில் அந்த பயோஸான் 4 இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கிறான்.
பவளப் பள்ளத்தாக்கு சென்ற பிறகு, கதையில் திடீர் திருப்பமாக சூர்யநாராயணன் கையில் துப்பாக்கி முளைக்கிறது. தான் கண்டுபிடித்த அந்த பயோஸான் 4 நுண்ணுயிர்களை விவசாயத்திற்குப் பயன்படுத்தி, நாட்டிற்கு நல்லது செய்ய நினைத்த சூர்யநாராயணன் தன்னைச் சுற்றியிருந்த எதிரிகளிடம் இருந்து தப்பினாரா..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #pavala_pallathakku
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=532
Leave a Reply