கோடி கோடி மின்னல்கள்..! – Crime Novel

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அதிலிருந்து அவர்களை மீட்பதற்காக “மனசுக்குள் மழையா..?” என்ற பெயரில் சைலென்ட்டாக சமுதாயப் பணியாற்றிவரும் வைகை, அந்த ‘மெட்டியோசை’ பெண்கள் மாத இதழுக்கு பேட்டி கொடுக்க மறுத்து விடுகிறாள்.

மன நிம்மதிக்காக செய்யும் ஒரு விசயத்தை விளம்பரம் போட்டு வியாபாரமாக்குவதை விரும்பாத வைகை, ஹன்ஸா ஹாஸ்பிடலில் டைபிஸ்ட் வேலையில் இருப்பவர்.

அதிர்ஷ்டவசமாக வைகையின் தொண்டுப் பணிக்கு தயாநிதி அறக்கட்டளையில் சார்பில் 5 லட்ச ரூபாய் கிடைக்க, அதை வைத்து சேவையைத் தொடர முடிவு செய்கிறாள். ஆனால், அறக்கட்டளை பெயரில் பணத்தைக் கொடுத்து உதவுவது போல் பணம் கொடுத்து பாதியைத் திரும்ப வாங்கிகொள்ள திட்டம் தீட்டி இருந்த அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுகிறாள் வைகை.

இந்நிலையில் வைகையின் சமூக சேவையைப் பார்த்து வியந்த டாக்டரின் மகன் ஆதித்யா அவளை விரும்ப, வைகையோ மெட்டியோசை பத்திரிக்கையின் ப்ரைம் ரிப்போர்ட்டர் இளஞ்செழியனை விரும்புகிறாள். ஆனால், எதிர்பாராத விதமாக திடீரென நோயில் விழுந்த இளஞ்செழியன் மரணத்தைத் தழுவுகிறான்.

இதன் பிறகு தனது திருமணத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த வைகை குடும்பத்துடன் வேறு ஊருக்கு சென்று டீச்சராக வேலை பார்க்கிறாள். ஏற்கனவே கவுன்சிலிங் கொடுத்து காப்பாற்றிய பிரணவ்வை இங்கு சந்திக்கிறாள் வைகை.

இங்கும் அவள் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது. வைகை கிட்னி டோனர் என்பதை அறிந்த பிரணவ்வின் தாய் திருமணத்தை நிறுத்த முடிவு செய்ய போக, எல்லோருக்கும் நல்லது நினைத்த வைகையின் நிலை என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #kodi_kodi_minnalgal

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1015

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: