நீ மட்டுமே வேண்டும்..! – Crime Novel

ஏரியாவில் இருக்கும் சில ரௌடிகள் தன்னிடம் வம்பிழுப்பதாகவும், அதனால் தனக்கு கராத்தே சொல்லிக்கொடுக்கும்படி சத்யேசுவிடம் வேண்டிக் கேட்கிறாள் சுகிர்தா. ஆண்களுக்கு மட்டுமே கராத்தே சொல்லிக்கொடுத்து, பகுதி நேர டிடெக்டிவாகவும் இருக்கும் சத்யேசு யோசித்து முடிவெடுப்பதாகக் கூறி அவளை அனுப்பி வைக்கிறான்.

விதி வலியது. இந்தப் பெண்ணுக்காக தன்னுடைய கராத்தே பள்ளி விதிகளை கைவிட வேண்டுமா..? என்று எண்ணிக் கொண்டிருந்த சத்யேசுவிற்கு மிரட்டல் போன் வருகிறது. போன் செய்தவன் சுகிர்தாவிற்கு கராத்தே கற்றுக் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கிறான்.

சத்யேசு தன்னுடைய அசிஸ்டெண்ட் சூரசிடம் முந்தைய நாள் சுகிர்தாவைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், அவனுடைய டிடெக்டிவ் ஏஜென்சியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த மங்களம் தன்னுடைய பெண் ராகினியுடன் சத்யேசுவை சந்திக்க வந்திருந்தாள்.

ராகினிக்கு மாப்பிள்ளையாக வரவிருக்கும் ஹோட்டல் அரோமா இன்டர்நேஷனல் ஓனர் நந்தகுமாரைக் கண்காணித்து ரிப்போர்ட் கொடுக்கும் வேலை சத்யேசுவிற்கு வருகிறது. இதற்கிடையில் சுகிர்தாவைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்கிறான் சத்யேசு.

இந்நிலையில் ஹோட்டல் அரோமாவில் மறைமுக விசாரணை நடத்தச் சென்றிருந்த சத்யேசும் சூரசும் எதிர்பாராத விதமாக அங்கே இருந்த சுகிர்தாவைப் பார்க்க, அவளோ அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறாள். அடுத்த நாள் ஒன்றும் அறியாதவள் போல கராத்தே பள்ளிக்கு வந்த அவளை எதுவும் கேட்காமல் இருவரும் விட்டுவிடுகின்றனர்.

ஆபத்தில் இருந்த சுகிர்தாவைக் காப்பாற்றச் சென்ற சத்யேசு அவனே அந்த ஆபத்தில் சிக்கிக் கொள்ளப் போவதை உணராமல்.

அடுத்து வந்த நாட்களில் நந்தகுமாரைப் பற்றி விசாரிக்க சென்ற இடத்தில் திடீரென அவன் கொலை செய்யப்பட்டு கிடக்கிறான். கொலை செய்யப்பட்ட அறையில் சுகிர்தாவின் மோதிரம் கிடைக்கிறது. ஆனால், கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமோ சத்யேசுவின் கராத்தே பள்ளியில் கிடைக்கிறது.

அந்த முன்னிரவில் சத்யேசுவை சந்திக்க சுகிர்தா கராத்தே பள்ளிக்கு அவனைத் தனியே பேச அழைக்கிறாள். சுகிர்தாவும் இதற்கு பின்னணியில் இயங்குபவர்களும் யார்..? ஒவ்வொரு முறையும் பொய்யுரைத்து தப்பித்துக் கொண்டிருந்த சுகிர்தாவின் குட்டு வெளிப்பட்டதா..? கொலைக் குற்றவாளி யார்..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #nee_mattume_vendum

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1236

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: