வாஷிங்டனில் விவேக்!! – Crime Novel

நள்ளிரவு நேரத்தில் சி.பி.ஐ ஆபிசிற்கு பைக்கில் விரைந்து கொண்டிருந்த விவேக்கின் வழியைக் குறுக்கிடும் விதமாக கார் ஒன்று ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கிய விவேக்கை நான்கு பேர் கொண்ட குழு கடத்திச் செல்ல, விவேக் யோசனையுடன் சென்றான்.

அங்கே அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. சிபிஐ சீஃப் வாத்சல்யனுடன் இரண்டு சிஐஏ அதிகாரிகளான கேரி மற்றும் ஹோம்ஸை விவேக் அங்கு சந்தித்தான். வந்திருந்த அமெரிக்கர்களுக்கு தன்னுடைய திறமையை நிரூபிக்க நடத்தப்பட்ட டிராமா தான் இந்த கடத்தல் என்று அப்போது தான் விவேக்கிற்குப் புரிந்தது.

சிபிஐ சீஃப் இப்போது விசயத்திற்கு வந்தார். ரசாயன ஆயுதத் தயாரிப்பில் புகழ்பெற்ற சீஃப் கெமிஸ்ட் ஷெட்டியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவருடைய அரிய கண்டுபிடிப்புகளைத் தீவிரவாதிகள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் விவேக்கிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தனிப்பட்ட விசயத்திற்காக வாஷிங்டன் செல்ல இருந்த ஷெட்டிக்குப் பாதுகாப்பு அரணாக இருக்க விவேக்கிடம் உதவி கோரப்படுகிறது. இதற்கு ஒப்புக்கொண்ட விவேக், ஒரு திட்டத்தை வகுக்கிறான். மாறுவேடத்தில் விவேக், ரூபலா மற்றும் ஷெட்டி மூவரும் வாஷிங்டன் செல்ல வேண்டும். அங்கே ஷெட்டிக்கு வரும் ஆபத்துகளை யோசித்து திட்டம் தீட்டியிருந்தான் விவேக்.

திட்டத்தின் ஒரு பகுதியாக கோகுல்நாத்தும் மாறுவேடத்தில் யாருக்கும் தெரியாமல் அதே விமானத்தில் பயணிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக ஏர்போர்ட்டிலேயே கேரி & ஹோம்ஸை அடித்துப்போட்டு விட்டு அவர்களைப் பணயமாக வைத்து விவேக்-ரூபலா மற்றும் ஷெட்டியைக் கடத்திச் சென்று சமூக விரோதியான பில்ஸ் வொய்ட்டிடம் அவர்களை ஒப்படைக்கிறார்கள் எதிரிகள்.

கோகுல்நாத் எப்படியும் காப்பாற்ற வருவார் என்று எண்ணிக்கொண்டிருந்த விவேக், அங்கு அவர் அடைத்து வைக்கப்படிருந்ததைப் பார்த்தவுடன் நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்டான்.

ரசாயன ஆராய்ச்சியின் அபூர்வமான கண்டுபிடிப்புகளைத் தனக்கு தரும்படி ஷெட்டியை மிரட்டுகிறான் பில்ஸ். ஆனால், மாறுவேடத்தில் இங்கு வந்திருப்பதோ ஷெட்டியின் தோற்றத்திலேயே இருக்கும் அவருடைய அண்ணன் விஸ்வேஸ்வரய்யா.

இதனால் ஆத்திரமடைந்த பில்ஸ், ரூபலா-கோகுல்நாத்-விஸ்வேஸ்வரய்யாவைப் பிணையாக வைத்துக் கொண்டு ஷெட்டியை இங்கே கூட்டிவர, திறமையான ஹெலினா என்ற பெண்ணை விவேக்குடன் இந்தியா அனுப்புகிறான்.

மேற்கொண்டு நடந்த விபரங்களை விவேக்கின் மூலம் அறிந்துகொண்ட ஷெட்டி ஃபார்முலாக்கள் அடங்கியுள்ள ஃபிளாப்பியுடன் வாஷிங்டன் செல்ல, அனைவரும் உயிருடன் இந்தியா திரும்பினரா..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #washingtonil_vivek

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=978

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: