ப்ராஜக்ட் ஃ

சின்ன வயசுல நாம எல்லாரும் புதையல் தேடிப் போற மாதிரியான சாகசக் கதைகளை ரொம்ப விரும்பிப் படிச்சிருப்போம். ஆனா, புதையலைப் பத்தி பெரியவங்களும் விரும்பிப் படிக்கற மாதிரி எழுதப்பட்ட ஒரு புத்தகம் தான் இந்த ப்ராஜக்ட் ஃ

இந்தக் கதையோட ஹீரோ வில்லனோட ஆணையின்படி புதையலைத் தேட வேண்டிய கட்டாயத்துல இருக்கான். இறந்துபோன தன்னோட தாத்தா விட்டுட்டு போன குறிப்புகளை வெச்சு ஹீரோ புதையலைக் கண்டுபிடிக்கணும். புதையலின் குறிப்பை விட்டுச்சென்ற தாத்தா, அந்தப் புதையலால் வரும் ஆபத்தையும் கூடவே லெட்டரில் விட்டுச் செல்கிறார். தன்னோட குடும்பத்தை வில்லன் கிட்ட இருந்து காப்பாத்த நினைச்ச ஹீரோ, புதையலைக் கண்டுபிடிக்க தன்னோட நண்பர்களையும் உதவிக்கு கூப்பிடறான். இதுல ஆச்சரியம் என்னன்னா வில்லன் யாருன்னு ஹீரோக்கே தெரியாது.

அதிர்ஷ்டவசமா அந்தப் புதையலை ‘ழ’கரம் அப்படிங்கற ஒரு குழு காலம் காலமா பாதுகாத்துட்டு வர்றாங்க. அதை எடுத்துக் குடுக்க வேண்டிய நிலைமையில இந்தக் கதையோட ஹீரோ இருக்கான். தன்னோட நண்பர்களோட சேர்ந்து அந்தப் புதையலை ஹீரோ தேடிட்டு இருக்கும்போது தான், அவன் தேடிட்டு இருக்கற புதையல் நகைகளோ இல்ல காசு பணமோ இல்லன்னு அவனுக்கே தெரிய வருது.

கிடைச்சிருக்க குறிப்புகளை சால்வ் பண்ணி ஒவ்வொரு இடத்தையும் நான்கு பேரும் சேர்ந்து கண்டுபிடிக்க முயற்சி பண்றாங்க. ஆனா, அந்த ஒவ்வொரு குறிப்புகளும் ரொம்பவும் சிக்கலான கோட் யூஸ் பண்ணி எழுதப்பட்டிருக்கு.

இது எல்லாத்துக்கும் மேல குடும்பத்துக்காக புதையலைத் தேட ஹீரோ ஒத்துக்கிட்டும் ஹீரோவோட அப்பா கொலை செய்யப்படறார். மேற்கொண்டு இதிலிருந்து விலக நினைத்த ஹீரோவின் காதலியைக் கடத்தி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்கிறான் வில்லன்.

ஹீரோவோட ஒவ்வொரு அசைவையும் வில்லன் நேரே பார்த்துக்கொண்டு இருக்க, ஹீரோவின் தாத்தா விட்டுச் சென்ற குறிப்புகள் உணர்த்திய புதையல் எது..?

அகில், கீர்த்தி வாசன், சுதர்சன், சினேகா நான்கு நண்பர்கள் சேர்ந்து பல தடைகளையும் தாண்டி கடைசியில் புதையல் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க, வில்லன் அவர்களை வைத்து உடனே புதையலைப் பெற முயற்சிக்கிறான். நண்பர்களுக்குள்ளேயே ஒரு கறுப்பு ஆடு ஒளிந்திருக்க, மேற்கொண்டு புதையல் வில்லன் கைக்குச் சென்றதா..?

இந்தக் கதையை மையமா வெச்சு ‘ழ’கரம்-னு ஒரு தமிழ் படம் கூட எடுத்திருக்காங்க. ஆசிரியர் கவா கம்ஸ் எழுதிய இந்தப் புதையல் புத்தகம் நிஜமாவே நம்மள வேறொரு உலகத்துக்குக் கண்டிப்பா கூட்டிட்டுப் போகும்னு நான் நம்பறேன். தமிழைப் பற்றி தமிழர்களுக்கே கூட தெரியாத பல விஷயங்கள் அடங்கிய இந்தப் புத்தகம் நிச்சயமா ஒரு புதையல் தான்.

#one_minute_one_book #tamil #book #review #fiction #kava_kamz #project_ak

want to buy : https://www.amazon.in/s?k=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%83+-+Project+AK&i=stripbooks&creative=24790&tag=x_gr_w_bb_in-21&ref=x_gr_w_bb_sout

One thought on “ப்ராஜக்ட் ஃ

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: