பகடைக் காய்கள்..! – Crime Novel

அண்டை நாடுகளுடனான போரை விலக்கி சமாதானத்தை முன்னிறுத்த பாராளுமன்றத்தில் இருந்து பொறுப்புள்ள எம்.பிக்களைக் கொண்ட ஒரு குழு பயணிகளுடன் சேர்ந்து விமானத்தில் பறக்க இருந்தது. அந்தத் திட்டத்தை முறியடித்து 7 எம்.பிக்களுக்கும் 8 பயணிகளுக்கும் விமானத்திலேயே சமாதி கட்டுவது தான் திட்டம். உஸ்மானும் பாபுராவும் முதலில் திட்டத்தை சொன்ன போது யோசித்த சென்னும் துவாரகேஷும் தொகை பெரிதாகப் பேசப்பட்டவுடன் இதற்கு ஒப்புக்கொண்டனர்.

இந்தத் திட்டத்திற்காக 25 கோடிக்கு விலை போன பைலட் சென்னும் கோ-பைலட் துவாரகேஷும் திட்டத்தை இன்னொரு முறை விளக்கிக் கொண்டனர். இதில் ஏர் ஹோஸ்டஸ் வஹிதாவின் பங்கு பயணிகளுக்குத் தூக்க மாத்திரை கலந்த டிரிங்கைக் கொடுத்து அவர்கள் மயங்கிய அடுத்த விநாடி துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது.

அடுத்ததாக கோ-பைலட் துவாரகேஷ் குரலை மாற்றி மிமிக்ரி செய்து கடத்தல்காரனைப் போல பேசி தங்களுடைய அற்ப கோரிக்கைகளை அரசாங்கத்தின் முன் வைக்க வேண்டியது. பிறகு கடத்தல்காரர்கள் இருவரும் இவர்களிடம் கைகலப்பில் ஈடுபட்ட போது இவர்கள் கைக்கு துப்பாக்கி கிடைத்து மூவரும் அவர்களிடம் இருந்து தப்பி வருவது.

இதற்காக பைலட்டும் கோ-பைலட்டும் பயணிகளில் இருவரை கடத்தல்காரர்கள் போல் செட்டப் செய்து திட்டத்தை நிறைவேற்றக் காத்திருந்தனர். திட்டம் நிறைவேற இருந்த நாளில் மூன்று துப்பாக்கிகளைத் தன்னுடைய பெரிய கொண்டைக்குள் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்தாள் வஹிதா. பைலட்டும் கோ-பைலட்டும் ரெடியாக இருக்க, ஃப்ளைட் எம்.பிக்களுடன் ஆரவாரமாகக் கிளம்பியது.

திட்டப்படி எல்லோரையும் சுட்டு விட்டு தங்களை நல்லவர்கள் போல காட்டிக் கொண்ட சென்னும் துவாரகேஷும் தங்களுக்கு வேலை கொடுத்த இந்தத் திட்டத்தின் மூலம் யார் என்பதை அறிய அவரைச் சந்திக்க நேரில் செல்கின்றனர். இதற்கெல்லாம் மூலகாரணம் ஒரு பெண் என்பதை அறிந்த அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

இவர்களுக்கு முன்னால் அங்கு வந்து சேர்ந்திருந்த வஹிதா, பைலட்டும் கோ-பைலட்டும் விமான விபத்தை செட்டப் செய்து நாடகமாடியதை சொல்லிவிட, பகடைக்காய்களாக மாற்றப்பட்ட இருவரின் நிலைமை என்ன..? இந்த மோச காரியத்திற்குத் தலைவியான அந்தப் பெண் யார்..? வஹிதா தீவிரவாதத்திற்குத் துணை போக காரணம் என்ன..?

இந்தப் புத்தகத்தின் Buy Link கிடைத்தால் வாசகர்கள் Comment-இல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #pagadai_kaaigal

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d