மங்களூர் எக்ஸ்பிரஸ் வேகமாகப் போய்க்கொண்டிருக்க அந்தக் கூபேயில் ஹரிபாபுவும் மேத்தாவும் மட்டுமே பயணித்துக்கொண்டிருந்தனர். டிக்கெட் செக் செய்ய வந்த டிடிஈ மோகன்ராஜை கூட்டு சேர்த்துக் கொண்டு குடித்து கும்மாளம் போட்டுக்கொண்டே வந்தனர்.
டிடிஈ-க்கு போதை அதிகமாகவே தங்களுடைய திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தனர் மேத்தாவும் ஹரிபாபுவும். கடத்திக் கொண்டுவந்திருந்த தங்க பிஸ்கெட்டுகளை டிடிஈ மோகன்ராஜின் பெட்டிக்குள் மறைத்து வைக்க உதவி கேட்கின்றனர்.
பயந்துகொண்டே ஒப்புக்கொண்ட டிடிஈ-யை இருவரும் சேர்ந்து சமாதானப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அடுத்த ஸ்டேஷனில் ஏறிய போலீஸ் மேத்தா-ஹரி இருவரின் பேக்குகளை செக் செய்துவிட்டு ஒன்றும் கிடைக்காமல் போகவே ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
ரயில் கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று விட்டு வேகமெடுத்த நேரத்தில், ஒரு பெண் ஓடி வந்து அந்த கம்பார்ட்மென்ட்டில் ஏறிக்கொள்கிறாள். அந்தக் கம்பார்ட்மென்ட்டில் இரண்டு ஆண்களைத் தவிர வேறு யாரும் இல்ல என்பதை அப்போது தான் அவள் கவனித்தாள்.
இண்டர்வ்யூக்காக மெட்ராஸ் சென்று கொண்டிருந்த அவளை மேத்தாவும் ஹரியும் பலவந்தப்படுத்த, ஹரிபாபுவைக் கொலை செய்கிறாள் அந்தப் பெண். கோபமடைந்த மேத்தா அந்தப் பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொள்கிறான்.
நடந்த சம்பவங்களைப் போலீஸிடம் இருந்து மறைக்கத் திட்டம் போட்ட மேத்தாவும் டிடிஈ-யும் திட்டத்தை அரங்கேற்றி தப்பித்தனர். அந்தப் பெண்ணின் உடலைத் தூக்கியெரிந்தனர்.
அதே நேரத்தில் திருச்சி ஸ்டேஷனில் தயிர் டின் அடுக்கப்பட்டிருந்த இடத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் பிணத்தைப் போலீசார் கண்டுபிடிக்கின்றனர். அடுத்ததாக ஈரோட்டில் ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது.
அடுத்தடுத்த திடுக்கிடும் சம்பவங்களுக்கு மத்தியில் தங்கை சுகன்யாவைத் தேடி வருகிறான் செந்தில்குமார். தங்கை கொலை செய்யப்பட்டதை அறிந்த செந்தில்குமார் அடுத்து செய்தது என்ன..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #kondraal_kondraan_kondrean
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=391
Leave a Reply