இடம் : கல்யாண ரிசப்ஷன்
மணமேடையில் நின்றிருந்த மணமக்களான ஈஸ்வர்-நம்ருதா போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர். அதே வேளையில் நம்ருதாவிற்கு ஒரு போன் வருகிறது.
நூறு நாளில் நம்ருதாவின் வாழ்வில் விபரீதம் நிகழப் போவதாக அந்தக் குரல் மிரட்டிவிட்டு போனை வைக்கிறது. அதிர்ந்த அவள் ஈஸ்வரிடம் விசயத்தைச் சொல்ல அவன் அவளை சமாதானப்படுத்துகிறான்.
ஆனால் அடுத்த நாள் அதே நபரிடம் இருந்து மீண்டும் ஒரு போன் வருகிறது. சந்திரவதனம் இவர்களுக்கு ஒரு கிப்ட் அனுப்பியிருந்தான். கலக்கத்துடன் அந்த கிப்ட்டைப் பிரித்த ஈஸ்வர்-நம்ருதா இருவரும் உச்சகட்டமாக அதிர்ந்தனர்.
அது ஒரு தலையில்லாத பொம்மை..
இருவரும் போலீசிற்குச் சென்று கம்ப்ளைன்ட் கொடுக்க, சில நாட்களிலேயே ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட அந்த சந்திரவதனத்தைப் போலீஸ் கண்டுபிடிக்கிறது. இனி நிம்மதியாக வாழலாம் என்று நினைத்த ஈஸ்வர், இந்த செய்தியை சொல்ல வீட்டிற்கு வருகிறான். வீடு திறந்த நிலையிலேயே இருக்க, நம்ருதா அங்கு இல்லை. பயந்த ஈஸ்வர் வீடு முழுவதும் அவளைத் தேடுகிறான்.
அன்று மாலை சுமங்கலி பூஜைக்காக பக்கத்துத் தெருவிற்கு சென்றிருந்த நம்ருதா, வீட்டிற்குத் திரும்பி வந்த போது ஈஸ்வர் உட்கார்ந்த நிலையிலேயே செத்திருந்தான். மேலும் அவனுடைய வீட்டில் இருந்த போதைப்பொருள்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. அதைப் போலீஸ் கைப்பற்றுகிறது.
ஈஸ்வரின் உடையில் yours murderly என்ற வார்த்தையும் கொலையாளி விட்டுச் சென்ற அவனுடைய போட்டோவும் போலீஸ் கைக்கு கிடைக்கிறது.
அதே வேளையில் வேறொரு இடத்தில்..
டீத்தூள் பிசினஸ்மேனான லக்ஷ்மிநாராயணன் சைடு பிசினஸாக போதைப் பொருள் விற்பனை செய்வதாகப் போலீசிற்குத் துப்பு கிடைக்கிறது. லக்ஷ்மிநாராயணனின் வீட்டைச் சோதனையிட வந்த போலீசிற்கு அவனுடைய உயிரற்ற உடல் மட்டுமே கிடைக்கிறது.
அதிகாலையில் லக்ஷ்மிநாராயணன் கொலை செய்யப்பட்டிருக்க, அவனுடைய உடையில் yours murderly என்ற வார்த்தையையும் கொலையாளி விட்டுச் சென்ற அவனுடைய போட்டோவையும் போலீஸ் கைப்பற்றுகிறது. மேலும் லக்ஷ்மிநாராயணனின் வீட்டில் கிடைத்த லாக்கெட்டில் ஒரு பெண்ணின் போட்டோ இருக்கிறது.
லக்ஷ்மிநாராயணனின் மனைவி பவ்யாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசிற்கு எந்தத் துப்பும் கிடைக்காமல் போகவே, லாக்கெட்டில் இருந்த பெண்ணைத் தேடி போலீஸ் விரைகிறது. ஆனால் போலீஸ் தேடிச் சென்ற பெண், லக்ஷ்மிநாராயணனின் காரில் பிணமாகக் கிடைக்கிறாள்.
அவளுடைய உடையிலும் yours murderly என்ற வார்த்தையையும் கொலையாளி விட்டுச் சென்ற அவனுடைய போட்டோவையும் போலீஸ் கைப்பற்றுகிறது.
வரிசையாகக் கொலைகள் நடந்த வண்ணம் இருக்க, கொலையாளியின் போட்டோவைக் கையில் வைத்துக் கொண்டு அவனைப் பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. கேஸ் விவேக்கிடம் செல்கிறது. இந்த முறை விவேக் வகுத்த வியூகம் என்ன..? மேற்கொண்டு கொலைகள் நிகழும் முன் குற்றவாளி பிடிபட்டானா..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #namruthavin_naal
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1133

Leave a Reply