டிவியில் பரதநாட்டிய புகழ் ஜோதிகாவின் பேட்டி முடிந்து போயிருக்க, ஜோதிகா டிவியை நிறுத்த நினைத்த விநாடி டெலிபோன் அழைத்தது. எடுத்து பேசிய ஜோதிகாவிடம் பேசியது கோகுலன்.
எந்த கோகுலன்..?
ஐந்து வருடங்களுக்கு முன்னால் மைக்கேலைக் காதலித்த ஜோதிகா சர்ச்சில் அவனைத் திருமணம் செய்து கொண்ட போது போட்டோ எடுத்த மைக்கேலின் பிரெண்ட் தான் அந்த கோகுலன். திருமணமான ஒருமணி நேரத்துக்குள்ளேயே அவனுடைய சுயரூபம் தெரிந்து மைக்கேலின் முகத்தில் மோதிரத்தை விட்டெறிந்து விட்டு வந்தவள்.
பழைய நினைவுகளில் இருந்து திரும்பிய ஜோதிகாவை தனியே சந்திக்க கூப்பிடுகிறான் கோகுலன். மறுத்த ஜோதிகா, காதலனான வக்கீல் ராகவை உடனே சந்திக்க வரச் சொல்கிறாள். கடற்கரையில் காத்திருந்த ஜோதிகாவை ராகவ் சந்திக்க வரும் முன் கோகுலன் வந்து சந்திக்கிறான்.
இறந்து விட்டதாக நினைத்துக்கொண்டிருந்த மைக்கேல் உயிருடன் இருப்பதாகக் கூறிய கோகுலன், ஆக்ராவில் இருக்கும் அவனிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்துச் செல்கிறான். வெளிநாட்டில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்த உதவி செய்வதாகக் கூறிய கலாச்சாரத் துறை அமைச்சர் சுவர்ணா சௌத்ரி ஆக்ராவிற்கு வரும்படி ஜோதிகாவிற்கு அழைப்பு விடுக்கிறார்.
ஆக்ரா இறங்கிய சிலமணி நேரங்களிலேயே ஜோதிகாவை சந்தித்து பேச வருகிறான் மைக்கேல். ஆனால், அவனிடம் பேச விரும்பாத ஜோதிகா உடனே ராகவ்விடம் தகவல் தெரிவிக்கிறாள்.
அன்றைக்கு சாயந்திரமே ஹோட்டலுக்கு வந்து சேர்ந்திருந்தான் ராகவ். ஹோட்டல் அறையில் ஜோதிகா இல்லை. இரவு வரை பொறுத்துப் பார்த்த ராகவ் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கிறான்.
திடீர் திருப்பமாக சுவர்ணா சௌத்ரியின் வீட்டில் செத்து விடுகிறாள் ஜோதிகா. காரணம் சுவர்ணாவின் மகன் நீலேஷ். நீலேஷ் ஜோதிகாவை ஃபோர்ஸ் செய்ய அவள் இறக்கிறாள். இதைக் கேள்விப்பட்ட சுவர்ணா அதிர்கிறாள். குடும்ப டாக்டரின் உதவியுடன் ஜோதிகாவின் உடலை மூவருமாகச் சேர்ந்து டிஸ்போஸ் செய்கின்றனர்.
ஜோதிகாவின் மர்டரை போட்டோ எடுத்த ஒருவன் அதை வைத்து அவர்களை மிரட்டுகிறான். அவனுக்குத் தேவையான அரசு ஆவணம் ஒன்றைத் தருமாறு கேட்கிறான். அப்படிப்பட்ட ஆவணமே இல்லை என்று மறுத்துக் கூறிய சுவர்ணாவைப் போலீசில் சிக்க வைக்க நினைக்கிறான் அவன்..யார்..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #50kg_tajmahal
இந்தப் புத்தகத்தின் Buy Link கிடைத்தால் வாசகர்கள் Comment-இல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply