DAY08 | பால் நிலா ராத்திரி..!

மயக்கம் தெளிந்து கண்விழித்த வனிதா, ஒரு அறையில் படுக்க வைக்கப்பட்டிருப்பதை எண்ணி கலக்கமடைகிறாள். தன்னுடைய கைகள் வளையத்தில் மாட்டப்பட்டிருக்க, சற்றுமுன் நடந்த சம்பவங்களை பயத்துடன் மனதிற்குள் அசைபோடுகிறாள். சூப்பர் மார்க்கெட்டில் பர்சேஸ் முடித்துவிட்டு டாக்ஸியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த வனிதா, மயக்க மருந்தின் உபயத்தால் வண்டியிலேயே சரிய, டிரைவர் அவளை அந்த இடத்திற்குக் கொண்டு வந்தது தெரியவருகிறது.

பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த வனிதாவிற்கு மீண்டும் மயக்க மருந்தை செலுத்தி, அவளுடைய இருதயத்தை மட்டும் தனியே எடுத்துக்கொண்டான் அவன். வனிதாவைத் தேடி களைத்திருந்த அவளுடைய கணவன் புருஷோத்தம், போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கிறான்.

புருஷோத்தமின் அக்கம்பக்கத்தாரிடம் போலீஸ் விசாரணை மேற்கொள்ள, பக்கத்து வீட்டுப் பெண் பூவிழி சொன்ன தகவல் போலீசை நெருடுகிறது. போலீஸ் விசாரணை நடந்துகொண்டிருந்த போதே கோகிலா என்ற பெண்ணும் கடத்தப்படுகிறாள். இந்தமுறை சீக்கிய உடையணிந்திருந்த அவன், கோகிலாவின் கள்ளக்காதலனைத் தாக்கிவிட்டு அவளைக் கடத்திச் செல்கிறான். கோகிலாவின் இருதயமும் அவனால் வெளியே எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் அவனின் அடுத்த குறியாக பூவிழி வந்து மாட்டுகிறாள். பூவிழியின் இருதயத்தை எடுக்க அவன் முயற்சி செய்த விநாடி, வெளியே காலிங் பெல் அதிர்கிறது. திடுக்கிட்ட அவன் முகத்தை இயல்பாக வைத்துகொண்டு கதவைத் திறக்க விலாசம் கேட்டு ஒரு நபர் வெளியே நிற்கிறார்.

மீண்டும் உள்ளே வந்த அவன், காரியத்தை முடிக்க நினைத்த விநாடி டெலிபோன் வீறிடுகிறது. அவனுடைய பாஸ் அவனை உடனே அழைக்க, பூவிழியின் இருதயம் தப்பித்ததா..? இதற்கெல்லாம் காரணகர்த்தா யார்..? குற்றப்பின்னணியில் இருப்பது சைக்கோ வா..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #paal_nila_raatthiri

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1126

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d