இரவு தூங்கிக்கொண்டிருந்த ராயப்பன் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு நபர்களும் அட்டைக்கரி போல் உடல் கருகி சாவு – செய்தி.
பாறைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராயப்பன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு வீடு எரிந்த கேஸில் துப்பு எதுவும் கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. கேஸிற்கு முற்றுப்புள்ளி வைக்க அதே கிராமத்தைச் சேர்ந்த போலீஸ் ரத்தினகுமாரை அனுப்பி விரிவான விசாரணை மேற்கொள்ள கமிஷனரிடம் இருந்து உத்தரவு வருகிறது.
ரத்தினகுமாருடன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ரேகாவையும் உடன் அனுப்பி வைத்தார் கமிஷனர். அதிகாலை வேளையிலேயே சோலையார்புரம் கிராமத்திற்கு வந்து சேர்ந்திருந்த இருவரும் பாறைப்பள்ளம் போவதற்கு பஸ்ஸிற்காகக் காத்திருந்தனர்.
இருட்டு விலகாத அந்த நேரத்தில் தீனமாக ஒரு பெண்ணின் குரல் வரப்பு ஓரமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. பாறைப்பள்ளத்தில் உள்ள மாமா வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த தன்னை ஒரு சிலர் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், தப்பித்து இங்கு விழுந்துவிட்டதாகவும் கூறிய நந்தா என்ற பெண்ணையும் கூட்டிக்கொண்டு மூவருமாக பாறைப்பள்ளம் வந்து சேர்ந்தனர்.
பெற்றோரை இழந்து தனியாக அந்த கிராமத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த அண்ணன் முத்துக்குமார் வீட்டில் தங்குவதற்கு ரத்தினகுமார் முடிவெடுத்திருந்தான். இதற்குநடுவில் நந்தாவின் மாமா இரண்டு மாதங்களுக்கு முன்னமே இறந்திருக்க, முத்துக்குமாரின் வீட்டில் தஞ்சம் புகுகிறாள் நந்தா. ராயப்பனைப் பற்றி அண்ணனிடம் விசாரித்த ரத்தினகுமார் இதற்கெல்லாம் காரணம் மிராசுவான இரத்தினபூபதி என்பதை அறிகிறான்.
மிராசுவிடம் விசாரணை மேற்கொள்ள செல்கிறார்கள் ரத்தினகுமாரும் ரேகாவும். கேட்ட எல்லாக் கேள்விக்கும் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லிக்கொண்டிருந்த இரத்தினபூபதியிடம் தோட்டத்தில் வேலை செய்பவர்களின் விபரங்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டனர் இருவரும். வீட்டிற்குச் செல்லும் வழியில் இருந்த அணையைப் பார்க்கச் சென்ற அவர்களைத் துப்பாக்கியால் யாரோ மறைந்திருந்து சுட, அங்கிருந்து உயிர் தப்பிய இருவரும் போலீசில் புகார் கொடுக்கின்றனர்.
அன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த ரேகாவின் அறைக்கு அருகே யாரோ நடமாட, கும்மிருட்டில் ரத்தினகுமாரும் ரேகாவும் மர்ம நபரைப் பிடிக்கத் துப்பாக்கியுடன் செல்கின்றனர். ஆனால், எதிர்பாராத விதமாக மர்ம நபரின் தோட்டா பாய்ந்து ரேகா உயிரிழக்கிறாள்.
இந்நிலையில் கேஸில் ஒரு ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியாத ரத்தினகுமார் மனம் வெறுத்து தன்னுடைய போலீஸ் வேலையை ராஜினாமா செய்கிறான். முத்துக்குமாரிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்த நந்தா அன்று சினிமாவிற்குப் போவதாகச் சொல்லிவிட்டு, இடையில் ஒருவனை சந்தித்து ஒரு கடிதத்தைக் கொடுக்கிறாள்.
தன் சொந்த ஊருக்கே திரும்பி வந்த ரத்தினகுமார் தன்னுடைய அண்ணன் முத்துக்குமார் நந்தாவைக் காதலிப்பதை அறிகிறான். முத்துக்குமார்-நந்தா திருமணத்திற்கு அனைத்தையும் ஏற்பாடு செய்த ரத்தினகுமார் அன்று அவர்களைக் கைது செய்ய போலீஸ் வரும் என்று எதிர்பாக்காமலேயே..!
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #nenjil_oru_neruppu
இந்தப் புத்தகத்தின் Buy Link கிடைத்தால் வாசகர்கள் Comment-இல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Leave a Reply