மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்த சுலோச்சனா முதல் முறையாக தன்னுடைய கிராமத்தில் இருந்து நகரத்தில் தங்கி படிக்க வருகிறாள்.
சுலோச்சனாவின் ஒரே நோக்கம்..நன்றாகப் படிக்க வேண்டும் என்பதே.
ஊர் விட்டு ஊர் வந்த சுலோச்சனாவிற்கு நகரத்தில் எல்லாமே புதிதாகத் தெரிந்தது. மேலும் அதுவரை நன்றாகப் போய்க்கொண்டிருந்த அவளுடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையாக பிரசன்னா வருகிறான்.
அழகான & பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பிரசன்னாவைச் சுற்றி எப்போதுமே பெண்கள் கூட்டம் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட பிரசன்னாவே விழுந்தது சுலோச்சனாவைப் பார்த்து. எல்லாப் பெண்களும் தன்னைச் சுற்றி வருகையில், சுலோச்சனா மற்ற பெண்களிலிருந்து வேறுபட்டு இருந்ததால் அவளை விரும்ப ஆரம்பித்திருந்தான்.
இந்த லவ் புரபோசலை சற்றும் எதிர்பார்க்காத சுலோச்சனா கல்லூரியில் அவனிடம் இருந்து தப்பிக்க, அவனை நேராக சந்திப்பதை தவிர்த்து வந்தாள். எவ்வளவு எடுத்து சொல்லியும் அவன் அவளை விடாமல் துரத்திக்கொண்டே இருந்தான்.
காலேஜ் பிரிவு உபசார விழாவைக் கொண்டாட வீட்டில் அனைவருக்கும் பார்ட்டி கொடுத்தான் பிரசன்னா. பார்ட்டியில் ஒருவன் குடுத்த மோசமான ஐடியாவை செயல்படுத்த ஹாஸ்டலில் இருந்து சுலோச்சனாவைக் கடத்தி வருகிறான் பிரசன்னா.
சுலோச்சனாவின் கை கால்களை கட்டி வைத்து, அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிரசன்னா குடிபோதையில் மயங்கி கிடக்கிறான். அவனிடம் இருந்து தப்பித்து நேராக போலீஸ் ஸ்டேஷனிற்குச் செல்கிறாள் அவள். இந்த விஷயம் அவள் குடும்பத்திற்குத் தெரியவர, அவளை அங்கேயே தலை முழுகிவிட்டு சென்றனர் அவளின் பெற்றோர். பிரசன்னா மீது வழக்கு தொடுக்கிறாள் சுலோச்சனா.
அனைவரும் கைவிட்டுச் சென்ற நிலையில் இருந்த சுலோச்சனாவிற்கு உதவ நண்பன் சுனில் வருகிறான். மேற்கொண்டு கேஸை நடத்த சுனிலும் அவன் தாயும் உதவி செய்ய பிரசன்னாவுடன் வாழ விரும்பாத சுலோச்சனா கேஸில் வென்றாளா..?
ஒருவன் தன்னைக் கெடுத்து விட்டால், கெடுத்த அவனையே திருமணம் செய்துவைப்பது மட்டுமே தீர்வு என்று நம்பிக்கொண்டு இருக்கும் சமூகத்தில் தன்னுடைய நிலையைத் தானே தீர்மானிக்கும் ஒரு பெண்ணாக..அனைத்துப் பெண்களுக்குமான ஒரு நாயகியாக சுலோச்சனா இருப்பாள்.
#one_minute_one_book #tamil #book #review #women_empowerment #nayagi #jansi
இந்தப் புத்தகத்தின் Buy Link கிடைத்தால் வாசகர்கள் Comment-இல் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Leave a Reply