இதுவரை எத்தனை சீரியல்களில் அவர் கேரக்டர் கொல்லப்பட்டது என்பது கோவிந்தராஜிற்கே தெரியாது. குறைந்தது 15 சீரியல்களிலாவது அவர் இறந்திருப்பார்.
இந்த சீரியலிலும் கோவிந்தராஜ் சாவதற்கு தேதி குறித்து விட்டார்கள். ஆம்…இளவயதில் கிடைத்த டாக்டர், வக்கீல், போலீஸ் என்று நடித்துக்கொண்டிருந்த வேஷங்கள் எல்லாம் இப்போது அவரை விட்டு தூர சென்று விட்டிருந்தன.
இப்போதெல்லாம் அவருக்கு அப்பா வேடங்கள் மட்டுமே வருகின்றன. காலத்திற்கேற்ப கோவிந்தராஜின் சீரியல் வேடங்களும் வேகமாக மாறிவந்தன. இதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால்,
“மரணம்..”
அனைவருக்கும் சகிக்க முடிந்தது இல்லை.
உதாரணத்திற்கு சாவின் விளிம்பில் இருக்கும் ஒருவரிடம் சென்று, “அதான் நல்லா வாழ்ந்து முடிச்சிட்டிங்களே..இனி நல்லபடியா போய் சேரலாம்” என்று சொல்லிப் பாருங்கள். “என் பேத்தி கல்யாணத்தை மட்டும் பாத்துட்டா போதும், நான் நிம்மதியா போய் சேர்ந்துடுவன்”னு சொல்லுவாங்க.” இப்படி வாழ்றதுக்கு காரணம் சொல்லுவாங்க.
இதுமாதிரி யாரும் விரும்பாத and எதிர்பார்க்காத ஒரு விஷயமா இருக்கற இந்த மரணம் தான் இப்போ கோவிந்தராஜோட வாழ்க்கையிலயும் விளையாடிட்டு இருக்கு.
எப்படியும் ஒரு 1000 எபிசோட் சீரியல்ல நடிச்சிரனும்னு நினைச்சிட்டு இருந்தவருக்கு 900-மாவது எபிசோட்-லயே அவர சாகடிக்கப் போறத நினைச்சு அவரு மேல அவரே பரிதாபப்பட்டுக்கிட்டாரு. அதுமாதிரி எப்பவும் பரிதாபமான முகத்தை வெச்சிட்டு மனைவி கிட்ட திட்டு வாங்கற ஒருத்தரா தான் கோவிந்தராஜை எல்லாருக்கும் அடையாளம் தெரியும்.
அப்படிப்பட்ட அப்பா கேரக்டரைப் பற்றி அவரின் மன விசும்பல்களைப் பற்றி யார் அறிவார்..?
#one_minute_one_book #tamil #book #review #short_story #appa_velai #paa_raghavan
Leave a Reply