“ஆனாலும் உனக்கு இவ்வளவு கோவம் ஆகாது..
உன்னை நான் வெறுக்கிறேன்..
அவன் ரொம்ப பாவம்..
இருட்டுன்னா எனக்கு ரொம்ப பயம்..
அவங்களுக்கு ரொம்ப இளகின மனசு..உடனே அழுதிருவாங்க..
நான் உன்னை நேசிக்கிறேன்..”
இந்த வார்த்தைகளை உங்க வாழ்க்கையில ஒருமுறையாவது எல்லாரும் கேட்டு இருப்பிங்க. இந்த வார்த்தைகள் உணர்வோட சம்பந்தப்பட்டது. உணர்ச்சி இது இல்லாம மனுசங்க யாருமே இருக்க முடியாது.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உணர்ச்சி இருக்கும். ஒரு சிலர் அதிகமா கோவப்படுவாங்க..ஒரு சிலர் உடனே அழுவாங்க..ஒரு சிலர் மிதமிஞ்சிய அன்போட இருப்பாங்க..அட ஆமாங்க..அன்பு..பாசம் கூட ஒருவகையான உணர்வு தாங்க..
ஆனா இந்த எல்லா உணர்வுகளையும் யாரு தங்களோட கைக்குள்ள(control) வெச்சிருக்காங்களோ..அவங்க தான் இந்த உலகத்துல வெற்றியாளர்களா இருக்காங்க..இருந்திட்டும் வராங்க.
உணர்ச்சி-ல என்ன இன்டெலிஜென்ஸ்-னு நீங்க கேக்கலாம். இப்போலாம் பிறக்கிற குழந்தை அறிவாளியா & புத்திசாலியா இருக்கானு பேரண்ட்ஸ் IQ டெஸ்ட் பண்ணி தெரிஞ்சுக்கறாங்க. ஆனா, IQ விசயத்துல பாஸ் ஆகற குழந்தைங்க கூட வளர்ந்த பிறகு இன்டெலிஜென்ட்டா இருக்காங்களான்னு கேட்டா..? இல்லன்னு தான் பதில் வரும்.
காரணம்…?!
அறிவாளியாக இருக்கற நிறைய பேருக்கு தங்களோட உணர்வுகளோட சரியான புரிதல் இல்லாதது தான். அதாவது எமோஷனல் இன்டெலிஜென்ஸ்(EQ) இல்லாதது தான். ஆபீஸ்-ல மேனேஜர் திட்டுனா நிறைய பேருக்கு வேலையே ஓடாது. அந்தக் கோவத்தை வீட்ல இருக்கவங்க மேல காட்டறவங்க தான் இங்க அதிகம்.
வேலையிடத்தில் மட்டும் இல்ல. நிறைய குடும்பத்திலயும் உணர்வு சம்பந்தமான பிரச்சனைகள் இப்போவும் இருக்கத் தான் செய்யுது. இந்த எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் மனித உடலின் தலையில் பாதம் பருப்பு அளவே இருக்கக் கூடிய அமிக்டலா தான்.
அமிக்டலா..?! – உணர்வு ரீதியான முடிவுகளை எடுப்பவர்.
உணர்ச்சி வேகத்தில் எடுக்கக் கூடிய முடிவுகள் எப்போதுமே தவறாகவே முடியும் என்பார்கள். அது 100-க்கு 100 உண்மை.
ஆக மொத்தத்தில் நாம் தினம்தினம் சந்திக்கும் பிரச்சனைகள், நம்மைப் பற்றிய நமக்கான புரிதல், பிறரைப் பற்றிய நம்முடைய புரிதல்கள் என எமோஷனல் இன்டெலிஜென்ஸ் என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று.
இப்போது வேலைக்கு ஆள் எடுப்பவர்கள் கூட IQ-வை விட EQ அதிகம் இருப்பவர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. உணர்வுகளைக் கட்டுப்படுத்தி தன்னை ஜெயிப்பவனே இந்த உலகை ஜெயிக்கிறான்.
ஆசிரியர் சோம. வள்ளியப்பன் அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட இந்த எமோஷனல் இன்டெலிஜென்ஸ் புத்தகம் அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒரு பொக்கிஷம்.
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0 விரைவில்
#one_minute_one_book #tamil #book #review #soma_valliappan #emotional_intelligence #informative