அந்தப்புரம்?!

ச்சீ.. ச்சீ.. இதைப் பத்தியெல்லாம் வெளிய பேசக் கூடாது..தப்பு என்பது போன்ற வசனங்களை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். நிறைய பேருக்கு தங்களது உடலில் நிகழும் மாற்றங்களை மற்றவர்களிடம் கேட்கத் தோன்றினாலும், பயத்தின் காரணமாக கேட்காமலேயே விட்டுவிடுவார்கள்.

நம்முடைய தாய்-தந்தை இல்லை எனில் இன்று நாம் என்பதே கிடையாது. அப்படி இருக்கும்போது செக்ஸ் என்ற வார்த்தையையே தவறாகப் பார்க்கும் சமுதாயத்தில் இருக்கும் நமக்கு இந்தப் புத்தகம் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

12-ஆம் வகுப்பு விலங்கியல் பாடப் புத்தகத்தில் உள்ள படங்களுக்கு விலங்கியல் ஆசிரியரே முழுமையான விளக்கத்தைச் சொல்லித் தராத காலத்தில் நாம் வாழ்கிறோம். 

அடல்ட் கன்டென்ட்(Adult Content), 16+ & 18+ என்று நிறைய படங்களின் தொடக்கத்திலேயே போடப்பட்டிருக்கும். அந்தப் படங்களுக்கு A சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது 18 வயதிற்கு மேல் உள்ள ஆண் அல்லது பெண் மட்டுமே அந்தப் படங்களைப் பார்க்க வேண்டும் என்பது விதி முறை.

சிறு வயதில் இருந்தே ஆண்-பெண் உடலில் நிகழும் மாற்றங்களை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தருவது இல்லை. அதையும் மீறி தற்போதைய  சில பெற்றோர்கள்.. நன்றாக கவனிக்கவும் சில பெற்றோர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகளின் உடலியல் மாற்றங்களைப் பற்றியோ மாதவிடாய் பற்றியோ சொல்லிக் கொடுக்க முன்வந்தாலும்..

“இதையெல்லாம் போய் குழந்தைகள் கிட்ட யாராவது சொல்லுவாங்களா..? வளர வளர அவங்களே புரிஞ்சுக்குவாங்க..”

இப்படிப்பட்ட பதில்கள் தான் வீட்டுப்பெரியவர்களிடம் இருந்து வரும்.

உண்மையில் முறையான பாலியல் கல்வி என்பது ஆண்-பெண் இருவருக்கும் மிகவும் தேவையான ஒன்று. பாலியல் கல்வியை கலாச்சார சீர்கேடாக இன்னுமே நம்முடைய நாட்டில் நம்பிக்கொண்டிருப்பவர்கள் ஏராளம். வெளிநாடுகளில் வாழும் குழந்தைகளுக்கு முறையான பாலியல் கல்வி அளிக்கப்படுகிறது.

முழுக்க முழுக்க தாம்பத்தியத்தைப் பற்றி இந்தப் புத்தகம் விளக்கினாலும், சிறு வயதில் தொடங்கி திருமணம் வரை நமது உடலில் நடக்கும் ரசாயன மாற்றங்களை எந்த ஒரு ஆபாசமும் இல்லாமல் சொல்லித் தருவதே அந்தப்புரம்.

இந்தப் புத்தகத்தில் வாசகர்களின் தனிப்பட்ட செக்ஸ் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் அளித்துள்ளார் புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் நாராயண ரெட்டி அவர்கள். டாக்டர் விகடனில் தொடராக வெளிவந்த போது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல் இது. இப்போது புத்தக வடிவில் உங்களுக்காக..

ஆசிரியரைப் பற்றி..

டாக்டர் நாராயண ரெட்டி ஒரு செக்ஸாலஜிஸ்ட். 1982-இல் இருந்து மருத்துவராக இருக்கும் அவர் தாம்பத்தியம் & செக்ஸ் சம்பந்தமாக பல ஆய்வுகளை நடத்திய அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார். செக்ஸ் பற்றி வெளியில் பேசவே சங்கடப்படும் இந்தக் காலத்திலும் கூட, மற்றவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து அவர்களின் வாழ்க்கைக்கு ஒளியாக இருக்கிறார்.

#one_minute_one_book #tamil #book #review #doctor_narayana_reddy #anthapuram #sex_education

want to buy : https://www.amazon.in/Anthapuram-Narayana-Reddy/dp/8184767366

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d