இனி இல்லை இலையுதிர்காலம்..! – Crime Novel

இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில் வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார் நஞ்சுண்டேஸ்வரன். தான் வாழ்வில் முன்னேற காரணமாக இருந்த மாமா நஞ்சுண்டேஸ்வரனைக் காப்பாற்ற விபரீத முடிவை எடுக்கிறார் ஷிவ்ராஜ்.

தன்னுடைய புட் ப்ராடக்ட்ஸ் கம்பெனிக்கு ஆட்களை இன்டர்வியூ செய்வது போல் நடித்து மாமாவிற்குப் பொருந்தக்கூடிய கிட்னியை எடுக்க ஆரோக்கியமான நபரைத் தேடுகிறார்கள் ஷிவ்ராஜும் அவருடைய மூத்த மகனான விஷ்வாவும்.

அந்த லிஸ்டில் இன்டர்வியூவிற்கு வருகிறாள் ஜனனி. ஜனனி – ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த, வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண். ஏற்கனவே இவர்கள் நடத்திய மெடிக்கல் செக்அப்பில் தேறிய அவளுடைய கிட்னியை எடுப்பது தான் திட்டம்.

திடீர் திருப்பமாக ஜனனியை இன்டர்வியூ செய்த ஷிவ்ராஜின் இளைய மகன் சத்யா அவளைக் காதலிக்கிறான். இதையறிந்த ஷிவ்ராஜ்-விஷ்வா உள்ளுக்குள் அதிர்ந்தாலும் திட்டத்தை மாற்றுகின்றனர்.

சத்யா-ஜனனி திருமணம் நடந்த மூன்று மாதங்களுக்குள் அவளை நோயாளியாக்கி அவளுடைய கிட்னியை எடுக்க வேண்டியது. பணம் படைத்த மூத்த மருமகளான உத்ராவிற்கு ஒரு ஏழைப் பெண் இந்தக் குடும்பத்தின் இளைய மருமகளாக வருவதில் உடன்பாடு இல்லை.

கணவன் விஷ்வாவுடன் சண்டையிட்ட அவள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். இந்நிலையில் அவர்களுடைய திட்டத்தை உத்ராவிடம் தெரிவிக்கிறான் விஷ்வா. ஒப்புக்கொண்ட அவளும் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்.

திருமணம் இனிதே முடிந்து ஹனிமூன் கிளம்பியது சத்யா-ஜனனி ஜோடி. ஆனால், எதிர்பாராத விதமா ஹார்ஸ் ரைடிங் சென்ற ஜனனிக்கு ஒரு விபத்து ஏற்பட ஒரு அதிர்ச்சி செய்தி இவர்கள் அனைவருக்கும் காத்திருக்கிறது…?!

#oneminuteonebook, #one_minute_one_book, #crime, rajeshkumar, crime_novel, #tamil, #tamil_novel, #tamil_pocket_novel, #book, #tamil_book, #tamil_book_review

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d