அக்பர்

பத்தாம் நூற்றாண்டிலேயே முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்திருந்தாலும், பாபர் தான் முழுமையான முகலாய ஆட்சி இந்தியாவில் மலரக் காரணமாக இருந்தவர். அக்பரைப் பற்றி பார்ப்பதற்கு முன், அவருடைய வம்சாவளியைப் பார்ப்பது முக்கியமாகிறது. அப்போது தான் அக்பரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

முதன்முதலில் டெல்லியைக் கைப்பற்றிய பாபருக்கு இந்தியாவை நிரந்தரமாக ஆளும் எண்ணம் இல்லை. இங்கு இருந்த வளங்கள் மட்டுமே அவருடைய குறிக்கோளாக இருந்தது. ஆனால், காலம் அவரை இந்தியாவின் அரசராக மாற்றியது.

பாபருக்குப் பின் வந்த ஹுமாயுன் மிகச் சிறந்த வீரராக இருந்தாலும், அவர் செய்த சில குளறுபடியால் ஆட்சியை இழக்க நேர்ந்தது. காடுகளில் வாழ்ந்து, பிற அரசர்களின் உதவியுடன் படையைத் திரட்டி வந்த ஹுமாயுன் பழையபடி ஆட்சியைக் கைப்பற்றினார்.

நாடோடியாக சுற்றித் திரிந்த போது அவர் சந்தித்த ஹமிதா என்ற பெண்ணை விரும்பித் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குப் பிறந்த குழந்தையே “அக்பர்”.

முகலாய வரலாற்றிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பேரரசர் அக்பர். அக்பரைப் பற்றி பள்ளிப் பாடத்திலேயே நாம் படித்திருந்தாலும், நமக்குத் தெரியாத பல தகவல்களைப் பற்றி இந்தப் புத்தகம் அலசுகிறது.

பிறந்த ஒரு வருடத்திலேயே தாய்-தந்தையைப் பிரிந்து வாழ்ந்திருந்த அக்பர் தன்னுடைய மூன்று வயதில் தான் திரும்ப அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அக்பர் போர்க்களத்தில் இருந்தபோது அவருடைய தந்தை இறந்த செய்தி அவரை எட்டியது. அப்போது அவருக்கு வயது 12.

சிறு வயதில் இருந்தே படிப்பில் நாட்டம் இல்லாத அக்பர், வளர்ந்த பிறகு புத்தகப் புழு ஆனார் என்று சொன்னால் நம்ப முடியுமா..?

ஆம்..அக்பர் மிகப்பெரிய நூலகத்தை வடிவமைத்திருந்தார். அவருடைய நூலகத்தில் எல்லா மத சம்பந்தப்பட்ட புத்தகங்களும் இருக்கும். மேலும் அதை வாசித்துக் காட்ட சொல்லி அதிலிருந்து அவர் ஞானம் பெற்றார்.

நாட்டுநலனுக்காக ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த இளவரசிகளை மணந்தார். ஆம்..அக்பர் 30 பெண்களைத் திருமணம் செய்துள்ளார். அக்பரின் சிறுவயது முதல் உடன் இருந்து அவருக்கு ஆலோசனைகளை வழங்கி அக்பரை வழிநடத்தியவர் பைரம்கான். ராஜ விசுவாசி. அவருடைய உதவி இல்லாமல் நிச்சயமாக அக்பரால் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்க முடியாது.

ஆனால், அவரையும் விதி விட்டுவைக்கவில்லை. அந்தப்புரத்துப் பெண்கள் அக்பரை மாற்றி வழிநடத்த, பைரம்கானை மெக்கா அனுப்பி விட்டார் அக்பர். இப்படி ஒவ்வொருவரையாக நம்பி வாழ்ந்த அக்பர் பின்னாட்களில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக் கற்றுக்கொண்டார். அதன்பின் நிகழ்ந்த மாற்றங்கள் வானளாவிய புகழ்பெற்றது.

அவற்றை வாசித்து அக்பரைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஆசிரியர் : நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் சுருக்கமாக என்.சொக்கன் அவர்கள் தமிழகத்தில் பிறந்து தற்போது பெங்களுருவில் வசித்து வரும் அவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.

1990-ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கிய அவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

வாழ்க்கை வரலாறு, சிறுவர் இலக்கியம், தன்னம்பிக்கை, வெற்றியாளர்களின் வரலாறு, உளவுத்துறை சம்பந்தப்பட்ட பல துறை புத்தகங்களை எழுதியுள்ளார்.

இவருடைய நூல்கள் இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இணையத்தில் என்.சொக்கன் அவர்களைப் பின் தொடர..

http://nchokkan.com/

want to buy : https://www.panuval.com/akbar-3630575

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d