சர்ப்ப வியூகம் – Crime Novel

ஊட்டியில் உள்ள பிரபல தொழில் அதிபரான உமாபதி தன்னுடைய ஒரே மகளான துர்காவிற்கு வரன் தேடுகிறார். ஆனால் துர்காவும் வல்லப்பும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். வீட்டில் அப்பாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறாள் துர்கா. இந்நிலையில் எல்லாமே பொருந்திவர ஜாதகத்தில் வல்லப்பிற்கு களத்திர தோஷம் இருப்பது தெரிய வருகிறது.

அதாவது திருமணமான ஆறே மாதத்தில் வல்லப்பின் உயிருக்கு கெடு வைக்கிறார் துர்காவின் குடும்ப ஜோசியர் மாதையா. பிடிவாதமாக இருந்த துர்கா வல்லப்பை திருமணம் செய்து கொள்கிறாள். யாரும் எதிர்பாராத வகையில் முதலிரவு அறையிலேயே மாரடைப்பால் இறக்கிறான் வல்லப்.

இந்நிலையில் வல்லப் இயற்கையாக இறக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தன்னுடைய சித்தப்பா மற்றும் தாய்மாமாவின் மேல் சந்தேகப்பட்ட துர்கா போலீசை வரவழைக்கிறாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் வல்லப் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய, துர்காவின் சித்தப்பா மற்றும் தாய்மாமாவின் அறையை சோதனை செய்கின்றது போலீஸ்.

அவர்களுடைய அறையில் விஷப் பாட்டில் கிடைக்க, அதை வல்லப்பின் சிகரெட்டில் தோய்த்திருப்பதைக் கண்டுபிடிக்கிறது போலீஸ். குற்றவாளிகள் இருவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இந்நிலையில் ஊட்டிக்கு தம்பி வருணுடன் வருகின்றனர் அரி-ஜெயா தம்பதியினர். அரி-ஜெயா இருவரும் போட் ஹவுசிற்கு கிளம்ப தம்பி வருணை அரி தன்னுடைய பிரெண்ட் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான். ஆனால் வீட்டை அடைவதற்கு முன்னால் வண்டியில் இருந்து இறங்கிய வருண், தொலைந்து போகிறான்.

அரி-ஜெயா போலீசில் புகார் கொடுத்த நிலையில், மரச்சரிவில் இருந்து வருணைக் கண்டுபிடிக்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் வருண் அவனாக இல்லை என்பதை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கண்டுபிடிக்கின்றனர்.

திடீரென முழித்த வருண், ஆஸ்பத்திரியில் இருந்து நேராக மயானத்திற்குச் செல்கிறான். அங்கே அவன் வல்லப்பின் கல்லறை முன்னால் வல்லப்பாக நிற்கிறான்.

அவன் உடலில் இருக்கும் வல்லப்பை வெளியேற்றிய பிறகே, வருண் பழைய நிலைக்குத் திரும்புவான் என்பது புரிய, அவனை துர்காவிடம் அழைத்துச் செல்கின்றனர். துர்காவின் வீட்டிற்கு வழி சொன்ன வருண், அவளுடைய வீட்டின் மாற்றங்களை ஒன்று விடாமல் சொல்கிறான். பூட்டப்பட்டிருந்த அறைக்கு முன்னால் வந்த வருண், உள்ளே நுழைவதற்கு முன் வாசலிலேயே மயங்கி விழுகிறான். மேலும் நடந்தது என்ன..?

Buy Link

https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=649

#tamil #crime #tamil_novel #rajeshkumar #rajeshkumar_novel #sarppa_viyugam #crime_novel_overview #book_overview

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d