சின்ன வயசுல நம்ம எல்லாருக்குள்ளேயும் Fantasy, Magic மேல ஒரு அதீத ஆசை இருந்திருக்கும். உதாரணமா 90’s kids-க்கு ஜீபூம்பா பென்சில் மேல அவ்வளவு ஆசை இருந்திருக்கும்.
எதையாவது வரைஞ்சு மந்திரம் சொன்னா அது நிஜமா வந்துரும். அந்த மந்திரத்தை உச்சரிக்காத நாளே இருந்திருக்காது. உதாரணத்துக்கு Harry Potter படத்துல வர்ற மாதிரி 😊
வளர்ந்த பிறகு நம்ம சின்ன வயசு ஆசைகளையும் எண்ணங்களையும் நினைச்சா நாம சின்ன வயசிலேயே இருந்திருக்கலாம்னு தோணும்.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது நமக்குள்ள இருக்க அந்த ஆசை “ஒரு மேஜிக் நடந்து எல்லாமே மாறிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்”. இந்த எண்ணம் கண்டிப்பா வரும்.
இந்த பிரபஞ்சத்தோட மிகப்பெரிய மாயாஜாலம், ஜீபூம்பா எல்லாமே முயற்சி செய்யறது தான். முயற்சி ஆரம்பமாகும் போதே மேஜிக்கும் ஆரம்பிச்சுடும்.
அப்படிப்பட்ட மாயாஜாலக்காரர்களான Entrepreneurs-ஐப் பற்றியும், அவர்கள் செய்த ஜீபூம்பாக்களான Start-up பற்றியும் சாதனை கதைசொல்லும் புத்தகமே கேம் சேஞ்சர்ஸ்.
மிகவும் எளிமையான அதேசமயம் சுவாரஸ்யமான புத்தகம். எழுத்து நடை, தொகுத்த விதம் இதன் வெற்றி ரகசியம். ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் இருக்கும் முயற்சியின் சக்தியை நமக்கு உணரவைக்கத் தவறாது.
ஆனந்த விகடனில் கார்க்கிபவா எழுதி வெளியான தொடரின் தொகுப்பு இந்தப் புத்தகம்.
நீங்கள் வாசிப்பிற்கு புதிது என்றால் இந்த புத்தகம் உங்கள் வாசிப்பின் உந்துதலாக அமையும்.
#one_minute_one_book #tamil #book #review #successful_people #start_up #game_changers #karki_bava
want to buy : https://www.amazon.in/Game-Changers-Karki-Bava/dp/9388104277
Leave a Reply