மிஸ். ப்ரீதி, 545, பீச் ரோடு, மும்பை – Crime Novel

கலெக்டர் வகுளாபரணன் முக்கியமான மீட்டிங்கை அட்டென்ட் செய்வதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு முக்கியமான தகவலோடு ப்ரீதி என்ற ரிப்போர்ட்டர் பெண் கலெக்டரை சந்திக்க வருகிறாள்.

நீண்டகாலமாக கலெக்டர் தேடிக்கொண்டிருக்கும் ஸ்மக்ளர் சத்ரபதியைப் பற்றித் துப்பு கொடுக்க வந்திருப்பதாகச் சொல்லி கலெக்டரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறாள். அனுமதி கிடைத்ததும் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டுகிறாள் ப்ரீதி.

ஸ்மக்ளர் சத்ரபதியின் மகள் தான் ப்ரீதி என்பதே பிறகு தான் கலெக்டருக்கே தெரியவருகிறது. கலெக்டர் வகுளாபரணனின் பெண் மதுமிதாவைக் கடத்தி வைத்துக்கொண்டு ஒரு கோரிக்கையை முன் வைத்து கலெக்டரை மிரட்டுகிறாள் ப்ரீதி.

தன்னுடைய அம்மா-சத்ரபதியின் மனைவிக்கு ரிஸ்க்கான ஒரு ஹார்ட் ஆபரேசன் செய்ய வேண்டி இருப்பதாகக் கூறிய ப்ரீதி அதற்கு கலெக்டரின் உதவியைக் கேட்கிறாள். மதுமிதா கடத்தப்பட்ட விபரம் போலீசிற்குத் தெரியவந்தால் அவளைக் கொலை செய்யவும் தயங்காத சத்ரபதியை நினைத்துக் கலக்கமடைகிறார் வகுளாபரணன்.

இந்நிலையில் ஆபரேசன் நடந்துகொண்டிருக்கும்போது பாதியிலேயே ப்ரீதியின் அம்மா வலி தாங்காமல் இறக்கிறாள். ப்ரீதிக்கு இந்த உண்மை தெரிய வந்தால் மகளின் நிலைமை மோசமாகிவிடும் என்பதை அறிந்த கலெக்டர் மதுவைக் காப்பாற்ற ஒரு திட்டம் போடுகிறார்.

அதற்கு முன்னரே ஆந்திராவில் உள்ள ஒரு ஊரில் ஸ்மக்ளர் சத்ரபதி போலீசால் கைது செய்யப்படுகிறான். பின்னர் தான் ப்ரீதி சத்ரபதியின் மகள் இல்லை என்கிற திடுக்கிடும் தகவல் கலெக்டருக்கே தெரிய வருகிறது.

ப்ரீதியிடம் இருந்து மொத்த உண்மையையும் தெரிந்துகொண்ட கலெக்டர் மதுவைத் தேடி ப்ரீதியின் வீட்டிற்குச் செல்ல அங்கு மதுமிதா இல்லை. மது எங்கே..? யார் இந்த ப்ரீதி..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #miss_preethi_545_beach_road_mumbai

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d