சிறகடிக்க ஆசை..! – Crime Novel

அன்றைக்கும் ஒருவன் தன்னை பைக்கில் பின் தொடர்வதை அறிந்த லேகா கடுப்பானாள். இப்படி தினமும் கல்லூரி செல்லும்போதும், தோழிகளுடன் வெளியில் செல்லும்போதும் சிலர் தன்னைப் பின்தொடர்ந்து வருவதை சில நாட்களாகவே அவளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். இதனாலேயே லேகா அவளுடைய அப்பா ராமகிருஷ்ணனை வெறுத்தாள்.

காரணம், லேகாவைக் கண்காணிக்க அவள் அப்பா அவளுக்கு பாடிகார்ட்ஸ் போட்டது தான். கோடீஸ்வரரான ராமகிருஷ்ணனின் ஒரே மகள் லேகா. சிறுவயதிலேயே தாயை இழந்த லேகாவிற்கு மிகவும் அரிதான நோய் இருந்ததால், அவளுடைய மணிக்கட்டில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கல்லை ஜெம்மாலஜிஸ்ட் மதன் ராய் பொருத்தியிருந்தார்.

இந்தக் காரணத்தை அறிந்திராத லேகா, தன்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்திற்காக இன்டர்நெட்டில் சஞ்சீவ் உடன் பழக ஆரம்பித்திருந்தாள். முகம் தெரியாத அந்த சஞ்சீவ் இவளுடன் இனிக்க இனிக்கப் பேசி அவளைத் தன்னுடைய வலையில் விழுக வைத்தான்.

ராமகிருஷ்ணன் வெளியூர் சென்றிந்த சமயம் வீட்டை விட்டு சஞ்சீவ்வுடன் ஓடினாள் லேகா. ஏற்கனவே இரண்டு முறை விபத்தில் சிக்கிய அவள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்திருந்தாள். சிறுவயதில் லேகாவிற்கு ஆபரேஷன் செய்த மதன் ராய் இப்பொழுது அவளுடைய மணிக்கட்டில் இருந்த வைரக்கல்லுக்கு ஆசைப்பட்டு, அவளைத் தீர்த்துக்கட்ட சமயம் பார்த்துக் காத்திருந்தான்.

வெளியூரில் இருந்து திரும்பிய ராமகிருஷ்ணன் லேகாவின் லெட்டரைப் படித்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனார். தன்மீது சந்தேகப்பட்டு பாடிகார்ட்ஸ் போட்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த லேகா சஞ்சீவை முழுவதுமாக நம்பினாள். ஆனால், நிகழ்ந்ததோ வேறு.

ஒரு பக்கம் மதன் ராய் லேகாவை நெருங்கத் திட்டம் போட்டு லேகாவைக் கடத்த, இன்னொரு பக்கம் ராமகிருஷ்ணன் போலீஸ் உதவியுடன் மகளைத் தேட..

கடைசியில் மதன் ராயிடம் சிக்கிய ரேகாவின் நிலை..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #sirakadikka_aasai

want to buy : https://www.scribd.com/book/388772527/Sirakadikka-Aasai

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d